ஜப்பானின் வடக்கு பகுதியில் சக்திவாய்ந்த பூமியதிர்வு ஏற்பட்டநிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் ஜப்பானின் வடமேற்கு பகுதியில் ரிக்டர் அளவில் 6.8 ஆக பூமஜ அதிர்வு பதிவானது. இதனை தொடர்ந்தே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகவா பகுதியில் சுனாமி தாக்கலாம் என ரோக்கியுா வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பானின், ஹோன்சு தீவில் இருந்து 53 மைல் தொலைவில், கடற்பகுதியில், 7 மைல் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தினால், ஏற்பட்ட சேதம், பாதிப்பு குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.
ஜப்பான் அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுகின்றனர்.கடந்த 2011 ஆம் ஏற்பட்ட சுனாமியால் 15800 பேர் கொல்லப்பட்டதுடன் 2500 பேர் காணாமற் போனதுடன் புகுசிமாவிலுள்ள அணுஉலை மையத்துள் வெள்ளநீர் புகுந்தமையும் குறிப்பிடத்தக்கது.