மன்னார் – உயிலங்குளம் பகுதியில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார்.
மன்னார் உயிலங்குளம் பகுதியில் கடந்த 1985ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட 67 பொது மக்களுக்கே இவ்வாறு நேற்று (சனிக்கிழமை) மாலை 4.30 மணியளவில் சுடர் ஏற்றியும் பூ தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கை அரச படைகளினாலும் துணை இராணுவ நடவடிக்கைகளினாலும் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாளை மே 12ஆம் திகதி ஆரம்பித்து மே 18ஆம் திகதி வரை நினைவு வாரமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இச்சம்பவத்தில் பேருந்தின் நடத்துனர் வில்லியம் உட்பட 67 பயணிகளும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறுகையில், “இப்படுகொலைக்கு சர்வதேச நீதிப்பொறிமுறையின் ஊடக நீதி கிடைக்க வேண்டும் என சர்வதேச சமுகத்திடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். சர்வதேசத்தினூடாக நீதியை பெற்றுக்கொள்ள தொடர்ந்து போராடுவோம்” எனத் தெரிவித்தார்.