சிகிச்சையளித்தலில் முதன்மையான பங்குதாரர்கள் தாதியர்களே என்பதில் மாற்றுகருத்திற்கு இடமில்லை

வைத்திய சேவை என்பது பலசங்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டியாக இருந்தாலும் என்னை பொறுத்தளவில் சிகிச்சையளித்தலில் முதன்மையான பங்குதாரர்கள் தாதியர்களே என்பதில் மாற்றுகருத்திற்கு இடமில்லை என களுலவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்திட்சகர் ஜி.சுகுணன் தெரிவித்தார்
உலக தாதியர் தினத்தினை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பணிபுரியும் தாதியர்களின் ஏற்பாட்டில் hதியர்தின நிகழ்வு வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சி.வில்லரெத்தினம் மற்றும் அரச தாதிய உத்தியோத்தர் சங்கத்தின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
ஒருவரின் பிறந்தநாளை அவர் இறந்தபின்பும் ஆண்டாண்டு காலமாக மிகவும் சிறப்பாக வேற்று கருத்துக்கள் இன்றி கொண்டாடுவதற்கு அந்த நபர் செய்த பாக்கியம்தான் என்ன என்று பார்த்தால் இந்த புளோரன்ஸ் நையிற்றிங்கேள் செய்த சேவையும் அவரின் அற்பணிப்பான கடமையும்தான் இதற்கு காரணமாக அமைகின்றது. அந்த கடமைகள் அனைத்தும் இன்றுவரை மேன்மையான செய்திகளை எமக்கு தந்திருக்கின்றது.
இவ்வாறான அற்பணிப்பான சமூகத்தில் இருந்து உருவானவர்கள்தான் இந்த தாதியர்கள் ஆவார் சுகாதார வைத்திய துறையிலே  முதுகெலும்பாக இருக்கின்றவர்கள் என்ற நிலையில் இன்று நீங்கள் இருந்து கொண்டு இருக்கின்றீர்கள் இந்த நிலையில் இருப்பதற்கு நீங்கள் கொடுத்துவைத்தவர்களே. இவ்வாறானதொரு பெருமைக்குரியவர்களாகிய நீங்கள் இந்த பெருமையை உருவாக்கிய அந்த பெண்மணியின் செயற்பாடுகளுக்கு முன் உதாரணமாக செயற்பட வேண்டும்.
என்னைப்பொறுத்தவரை எந்தவொரு வைத்தியசாலைகளிலும் முதன்மையானவர்கள் அந்த வைத்தியசாலையில் சிறப்பானவர்கள் மற்றும் ஒரு வைத்தியசாலையில் நோயளிக்கு சிகிச்சையளிப்பதில் மிகமுக்கியமானவர்கள் யார் என்று கேட்டால் வைத்திய நிபுணர்களுமல்ல வைத்திய அதிகாரிகளுமல்ல அல்லது வைத்தியசாலையில் கடமைபுரியும் ஏனைய நிருவாகிகளுமல்ல என்னைப்பொறுத்தளவில் வைத்தியசேவை பலசக்கரஙகள் பொருத்தப்பட்ட வட்டியாக இருந்தாலும் தாதியர்களே இதில் மிகவும் முக்கியமான பங்குதாரர்களாக கொள்ளப்படுகின்றனர் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. அதனால்தான்
வைத்தியசாலைகளை நேசிங்ஹோம் என்றுகூட கூறுவார்கள்.
அடிப்படையில் எந்தவிடயத்தையும் நாங்கள் தீர்மானித்துவிடலாம் தொடங்கிவிடலாம் ஆனால் அதனை சரியாக செய்வது பணியாற்றுவது போன்ற பணிகளைதாதியர்களே செய்கின்றனர் அப்படிப்பட்ட பணியினை செய்கின்ற வைத்தியசாலையாக எமது வைத்தியசாலையை நான் கொள்ளுகின்றேன் அந்த வகையில் நானும் கொடுத்து வைத்தவன்தான் பல இடங்களில் பல முரண்பாடுகள் ஏற்படுகின்றன இதற்கு காரணம் நான்பெரியவன், என்கின்ற விட்டுக்கொடுக்குதன்மை இன்மைதான் இதற்கு காரணமாக அமைக்கின்றது அந்த வகையில் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் எனது சேவைகாலத்தில் நான் இவ்வாறான முரண்பாடுகளை நான் தலைமை அதிகாரி என்ற வகையில் நான் அனுபவிக்கவில்லை இது எனக்கு மிகவும் சந்தோசமளிக்கின்றது

Related posts