கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இம்மாதம் 17ஆம் திகதி உண்ணாவிரப்போராட்டம் ஆரப்பிக்கப்பட்டு ஞாசாரதேரரின் வருகையின் பின் நிறைவுக்கு வந்தது.
கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கல்முனை முருகன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தக் குருக்கள் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் அ.விஜயரெத்தினம் அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியத்தலைவரும் தொழிலதிபருமான கே.லிங்கேஸ்வரன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் மூலம் கடந்த 21 ம் திகதி பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்தியமை தொடர்பாக மாநகரசபை உறுப்பினர்கள் சந்திரசேகரம் ராஜன், அ.விஜயரெத்னம், விகாராதிபதி ரண்முத்துகல சங்க ரத்னதேரர், கல்முனை க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள் உட்பட நால்வரையும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுவிக்கப்பட்டிருந்தது.
இருந்த போதிலும் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தமையால் நீதிமன்றத்திற்கு செல்லமுடியாமையால் இன்று முன்னிலையாகி இருந்தனர்.
இதன்போது வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஐ.என். றிஸ்பான் உண்ணாவிரதிகளின் வாக்குமூலத்தை பொலிஸாரிடம் கோரினார். இதன்போது பிரதிவாதிகளிடம் வாக்குமூலம் பெறப்படவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த உண்ணாவிரத போராட்டம் தொடர்பில் வாக்குமூலத்தை பெற்றபின் மீண்டும் செப்ரெம்பர் மாதம் o2 திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. பாருக், ரீ.மதிவதனன் ஆகிய இரு வழக்கறிஞர்கள் தமிழர் தரப்பு சார்பாக முன்னிலையாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.