இயற்கைப் பசளையினைப் பயன்படுத்துவதனால் நோய்களில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இயற்கைப் பசளையினைப் பயன்படுத்துவதனால் தொற்றாநோய்கள் மற்றும் தொற்று நோய்களில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் இதனால் நாம் அனைவரும் இயற்கைப் பசளையின் பாவனையினை அதிகரிக்கவேண்டும் என  மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் செயலாளர் எஸ்.லெட்சுமிகாந்தன் தெரிவித்தார்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் ஏற்பாட்டில் இயற்கைப் பசளை விநியோகம் பிரதேசசபையின் செயலாளர் எஸ்.லெட்சுமிகாந்தன் தலைமையில் 24 ஆம்திகதி திங்கட்கிழமை இடம்பெற்றபோது தலைமையுரையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்  நாம் நஞ்சுகள் அற்ற மரக்கறிகளை உண்ணவேண்டும் அப்போதுதான் மனிதனைத்தாக்குகின்ற அனேகமான நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளமுடியும்.

 இன்று செயற்கைப் பசளையின் பாவனையினால் அதிகமான நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகவேண்டியுள்ளது இதனைக் கருத்தில் கொண்டுதான் இயற்கைப் பசளைகளை தயாரித்து  அதனை முன்னிலைப்படுத்துவதற்கான  ஒழுங்குகளை நாம் செய்துவருகின்றோம்.

 இயற்கைப் பசளையின் பாவனையினால் நஞ்சற்ற உணவுகளைப்பெறுவதுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாக அமையும்

குறிப்பாக பேராதனை கண்ணொறுவ விவசாய ஆராய்ச்சியூடாக தரநிர்ணய சான்றிதழ் பெற்று  இயற்கைப் பசளை உற்பத்தி எமது பிரதேசத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்று வருகிறது இது எமது பிரதேச விவசாயிகளுக்குப் பிரயோசனமானதாக அமைந்துள்ளது என்றார்

இந்நிகழ்வில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரதேசசபை உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் விவசாயிகள் கலந்துகொண்டனர்


Related posts