மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தினால் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.
மட்டக்களப்பில் பாடசாலை “மாணவர்களை விளையாட்டில் ஊக்குவித்து மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களை உருவாக்குவோம்”எனும் தொனிப்பொருளில் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தினரால் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.இதன்பிரகாரம் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தினால் தெரிவுசெய்யப்பட்ட 4பாடசாலைகளுக்கு இவ்வாறு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்சங்கம்,பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இணைந்து மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்திடம் தனது கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குமாறு கோரிக்கையை விடுத்திருந்தது.இதனை ஏற்றுக்கொண்ட கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் தமது கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திடம் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு விளையாட்டு வழங்குமாறு பணித்திருந்தது.
இவ்வாறு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் அதிபர் இ.பாஸ்கர் தலைமையில் வெள்ளிக்கிழமை(12)காலை 11.00 மணியளவில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தி கல்லூரிக்கு ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர்(திட்டமிடல்) வை.சீ.சஜீவன் பிரதம அதிதியாகவும்,கௌரவ அதிதிகளாக கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் இ.சிவநாதன்,பொருளாளர் எஸ்.ரஞ்சன்,மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் வீ.லவகக்குமார்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் எந்திரி வை.கோபிநாத்,பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் எஸ்.தர்சன்,உபதலைவர் கலாநிதி என்.மௌலீசன்,மற்றும் பிரதியதிபர்கள்,பாடசாலை முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டார்கள்.
இதன்போது விளையாட்டு உபகரணங்களை பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்களிடம் கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தினர் வழங்கிவைத்தார்கள்.