பா.உ கோ.கருணாகரம் ஜனா நிதி ஒதுக்கீட்டில் பட்டிப்பளை பிரதேச பொது அமைப்புகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா அவர்களின் 2021ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கழகங்கள், பொது அமைப்புகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
 
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கழகங்கள் மற்றம் பொது அமைப்புகளின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்படி உபகரணங்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.
 
பட்டிப்பளை பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பிரதேச உதவித் திட்டமிடல் அதிகாரி, பிரதேச கணக்காளர் மற்றும் உபகரணங்களைப் பெற்றுக் கொள்ளும் பொது அமைப்புகள் மற்றும் கழகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
 
இதன்போது அவர்களுக்குரிய உபகரணங்கள் அதிதிகளால் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts