இன்று தமிழ்நாட்டில் களைகட்டும் தமிழ்இலக்கியப்பெருவிழா. மட்டக்களப்பு பட்டறையின் தொடக்கவிழா 19இல் களுதாவளையில்..

( காரைதீவு  நிருபர் சகா)
 

உலக தமிழ்ப்பட்டறை இலக்கியப்பேரவையும் இந்திய தமிழாராய்ச்சி மன்றமும் இணைந்து இன்று(13) ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டில் மாபெரும் தமிழ்இலக்கியப்பெருவிழாவை நடாத்துகிறது.

 
தமிழ்நாடு பேரவைத்தலைவர் சேக்கிழார் அப்பாசாமி தலைமையில் நடைபெறும் இப்பெருவிழாவிற்கு சர்வதேச ஒருங்கிணைப்பாளர் முல்லைத்தீவைச்சேர்ந்த  முல்லைநாச்சியார் டென்மார்க்கிலிருந்து வருகைதருகிறார்.
 
உலகில் இவ்வாறாக 9தமிழ்ப்பட்டறைகளை நடாத்த தமிழ்ப்பட்டறை இலக்கியப்பேரவை திட்டமிட்டுள்ளதாக மட்டு.மாவட்டத் தலைவரும் முன்னாள் கிழக்குமாகாண மேலதிகமாகாண கல்விப்பணிப்பாளருமான எஸ்.மனோகரன் தெரிவித்தார்.
 
இலங்கையில்…
 
இலங்கையில் நுவரேலியாவிலும் அக்கரைப்பற்றிலும் மட்டக்களப்பிலும் 3பட்டறைகளை நடாத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
 
மட்டக்களப்பு தமிழ்ப்பட்டறைக்கான தொடக்கநிகழ்வு எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை காலை 9மணிக்கு இலக்கியப்பேரவைத்தலைவர் எஸ்.மனோகரன் தலைமையில் களுதாவளை  கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
 
இதற்கு இந்தியாவிலிருந்து சர்வதேச ஒருங்கிணைப்பாளர் முல்லைநாச்சியார் வருகைதரவுள்ளார். பிரதமஅதிதியாக மட்டு.மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் கலந்துசிறப்பிக்கவிருக்கிறார். ‘தமிழால்இணைவோம்’ என்ற வெல்லவூர்க்கோபாலின் கவியரங்கு மற்றும் மயானகாண்டம் போன்ற பல இலக்கியநிகழ்வுகள் அங்கு நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.
இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளராக அக்கரைப்பற்றைச்சேர்ந்த பிரபல கவிஞர் அப்துல்குத்தூஸ் செயற்படுகிறார்.
 
முகநூல்நுகரிகளின் அமைப்பாக செயற்படும் இப்பேரவை தமிழை வளர்ப்பதில் பிரதானபாகமாக் கொண்டுள்ளது.
 
பாடசாலை மாணவர்க்கு மட்டு.மாவட்டத்தில் இதுவரை 3இலக்கியப்பட்டறைகளை வளவாளர் பேராசிரியர் செ.யோகராசாவைக்கொண்டு நடாத்தியுள்ளதாகவும தலைவர் எஸ்.மனோகரன் தெரிவிக்கிறார்.
 

Related posts