இன ஐக்கியத்தை ஏற்படுத்தி தருகிறஉறவு பாலமாக மூலிகைகள் உள்ளனடாக்டர் குருநாதபிள்ளை தெரிவிப்பு

இந்நாட்டின் மூவின மக்களுக்கும் இடையிலான உறவு பாலமாக மூலிகைகள் விளங்குகின்றன, மூலிகைகளுக்கு இன மத மொழி பேதங்கள் கிடையாது என்று கலா ஆயுர்வேத வைத்திய கற்கைகள் பீட நிலையத்தின் பீடாதிபதி வைத்திய கலாநிதி இளையதம்பி குருநாதபிள்ளை தெரிவித்தார்.

 
காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலயத்தின் சிறுவர் தின கொண்டாட்டம் கடந்த வெள்ளிக்கிழமை காலை அதிபர் ஜி. பிரசன்னா தலைமையில் இடம்பெற்றது. இதில் சேர்மன் விநாயகமூர்த்தியின் புதல்வி நித்தியகலா துஷ்யந்தா, அட்டாளைச்சேனை தேசிய கல்வியல் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ. எம். நியாஸ் பி. எஸ். ஐ இணைப்பாளர் எஸ். சிவசுந்தரமூர்த்தி, பழைய மாணவர் சங்க செயலாளர் எஸ். தேவதாசன் ஆகியோரும் பேராளர்களாக கலந்து கொண்டனர்.
 
சிறப்பு நிகழ்வாக சேர்மன் விநாயகமூர்த்தி ஞாபகார்த்த மூலிகை தோட்டம் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. கலா ஆயுர்வேத வைத்திய கற்கைகள் பீட நிலையத்தின் இரண்டாம் வருட மாணவர்களால் மூலிகை இலை கஞ்சி தயாரிக்கப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது.
 
இதன்போது ஆயுர்வேத வைத்தியம், மூலிகைகள் ஆகியவற்றின் பெருமைகள் குறித்து உரையாற்றியபோதே வைத்திய கலாநிதி இளையதம்பி குருநாதபிள்ளை இவ்வாறு தெரிவித்தார்.
 
இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு
 
தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்கிற பேதம் மூலிகைகளுக்கு கிடையாது. எல்லாருக்குமே மூலிகைகள் நன்மை பயக்கின்றன. அனைவரையுமே குணப்படுத்துகின்றன.
 
கொரோனா என்கிற விடயம் மேலைத்தேய வைத்தியத்துக்கு புதியதுதான். ஆனால் ஆயுர்வேதத்தில் இதற்கு தீர்வு இருக்கின்றது. சித்தர்கள் இதை தீர்த்து வைத்திருக்கின்றனர். பெரியானை குட்டி சுவாமிகள், நவநாத சித்தர், சித்தானைக்குட்டி சுவாமிகள் ஆகியோரின் அற்புதங்களை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். நாமும் பலரை குணப்படுத்தி இருக்கின்றோம்.
 
உயிர் கொல்லி நோயாக கொரோனா இன்று மாறி இருப்பதை தொடர்ந்து ஆயுர்வேத வைத்தியத்தின் மகிமையும், மகத்துவமும் பெரிதும் பேசப்படுகின்றன. மஞ்சளை மிஞ்சிய மருந்து இல்லை என்கிற உண்மை துலங்கி நிற்கின்றது. உயிர் கொல்லி நோய்கள் என்று அறியப்படுகின்ற அனைத்து வியாதிகளுக்கும்கூட ஆயுர்வேதத்தில் நிரந்தர தீர்வு உள்ளன.
 
எமது எதி.ர்கால சந்ததியினருக்கு ஆயுர்வேத வைத்தியத்தின் பெருமை சிறுவயது முதல் ஊட்டப்படுதல் வேண்டும். அவ்வகையில் இப்பாடசாலையில் திறந்து வைக்கப்பட்டுள்ள மூலிகை தோட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. காரைதீவு மண்ணின் காவலனாக விளங்கிய சேர்மன் விநாயகமூர்த்தியின் பெயரில் இது உருவாக்கப்பட்டு இருப்பது சிறப்பு வாய்ந்தது. இதை சேர்மன் விநாயகமூர்த்தியின் புதல்வியை கொண்டு திறந்திருப்பது ரொம்பவே பொருத்தமானது ஆகும்

Related posts