உதிர்ந்து போனவர்கள் கட்சியை விமர்சிப்பதற்கு அருகதையற்றவர்கள் :ஞானமுத்து சிறிநேசன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது என சுயநலனுக்காக கட்சிதாவியவர்கள் கூட்டமைப்பை விமர்சிக்க தகுதியற்றவர்கள் என இன்று மண்டூர் மதியொளி விளையாட்டு கழகத்தின் மைதானத்தானத்திற்கு சுற்றுமதில் அமைப்பதற்க்கான அடிக்கல் நாட்டிவைக்கும் வைபவத்தில் இவ்வாறு  தெரிவித்தார்.
அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் மதியொழி விளையாட்டு கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் பொ. பரமானந்தம் தலைமையில் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கும் போது; தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது என்பது மரபு வழியாக கேட்கப்பட்ட கேள்வி. உண்மையாக யுத்த காலத்தில் தமிழ் பிரதேசங்களில் அபிவிருத்திகள் இடம்பெறவில்லை. அன்று கேட்ட கேள்வியை மறக்காமல் சிலர் இன்றும் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு வெறுமனே அரசியல் பேசிக்கொண்டு இருக்கின்ற கூட்டமைப்பாக இல்லாமல் பல்வேறுபட்ட மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளையும் செய்துவருகின்றது. ஆனால் எங்களிடம் இருக்கின்ற பலவீனம் போதியளவு விளம்பரங்களை செய்வதில்லை.அதுதான் எங்கள் குறைபாடு.
16 தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலர் உதிர்ந்து போனாலும்  மற்றவர்கள் எங்ளுடன் ஒற்றுமையாக செயற்படுகின்றனர்.
சிலர் தங்களது சுக போகங்களுக்காக கட்சிவிட்டு கட்சி தாவிச்சென்றாலும் நாங்கள் தெளிவோடு இருக்கின்றோம்.ஐந்து ஆண்டுகளுக்கு இந்த கட்சியில் இருந்துகொண்டு செயற்பட மக்களாணையை பெற்றிருக்கின்றோம்.
அவ்வாணைப்படியே செயற்படுவோமே ஒழிய அமைச்சுப்பதவிகளுக்காகவோ, சலுகைகளுக்காகவோ பாய்ந்து சென்று வாக்களித்த மக்களுக்கு எதிர்மறையாக செயற்பட விரும்பவில்லை.
சிலர் வாயில் வந்தபடி சுயநலன்களுக்காக சிலவற்றை செய்துவிட்டு மக்கள் நலன் என்று கூறுகின்ற சந்தர்ப்பவாதத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களை பொறுத்தவரை கூட்டமைப்பிலிருந்தே செயற்படுவோம். வெளியேறியவர்களுக்கான பதிலை மக்கள் வழங்குவார்கள்.
தமிழ்தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை அரசியல் மூலமாக நிதந்தர தீர்வை பெற்றுக்கொடுப்பதோடு மட்டுமல்லாது அபிவிருத்தி செயற்பாடுகளையும் சம காலத்தில் முன்னெடுப்பதற்கான நகர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றது.
தமிழ் மக்களுக்கான நிதந்தரமான, நியாயமான தீர்வைப்பெறும் அடிப்படை நோக்கோடு செயற்பட்டு அதற்கான நகர்வுகள் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் மகிந்த தரப்பும், சனாதிபதியும் ஆரம்பத்தில் சாதகமான நிலையில் இருந்தனர். 
தமிழ் தேசிய கூட்டமைப்பு அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்துடன் சேர்ந்து அரசியல் யாப்பை உருவாக்குகின்ற செயற்பாட்டில் இணைந்திருந்தோம் அதில் முன்னேற்றமும் கண்டிருந்தோம்.
இருந்தாலும் பேரினவாதிகளின் அடிப்படைவாத நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்பட்டமகிந்த தரப்பினர் குழப்பியடித்திருந்தனர்.
நாங்கள் தீர்வுத்திட்டம் என்ற அடிப்படையில் மாத்திரம் நில்லாமல் அபிவிருத்தி என்கின்ற விடையத்தையும் கருத்திற்கொண்டு செயற்படுகின்றோம். அதனால் கடந்த காலங்களில் ஊரக எழுர்ச்சித்திட்டம் மூலம் அபிருத்திகளை மேற்கொண்டு வருகின்றோம். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டதை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு வெல்லாவெளி பிரதேச சபையின் கௌரவ  தவிசாளர் கே. ரஜனி ,பிரதேச சபை உறுப்பினர்கள்,விளையாட்டு கழகத்தினர்,பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related posts