உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சிகை அலங்கார மற்றும் அழகுக் கலை நிலைய தொழில்புரிபவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சிகை அலங்காரம் மற்றும் அழகுக் கலை நிலைய தொழில் புரிபவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் வேண்டுகோளில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டலில் மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் செயற்படுகின்ற தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 
இத்திட்டத்திற்கமைவாக அழகுக் கலை நிலைய தொழில் புரியும் சுமார் 150 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளில், மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பரிவில் அழகுக் கலை நிலைய தொழில்புரிபவர்களுக்கு இவ்வுலர் உணவுப்பொதிகள் வைபவ ரீதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜாவினால் இன்று (19) மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. 
 
மேலும் இம்மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சிகை அலங்கார நிலைய தொழில் புரியும் 500 குடும்பங்களுக்கும், அழகுக்கலை நிலைய தொழில் புரியும் 150 குடும்பங்களுக்குமாக 650 குடும்பங்களுக்காக சுமார் 7 இலட்சத்தி 2ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் மட்டக்களப்பில் இயங்கிவரும் அம்கோர் நிறுவனத்தினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிழ்வில் அம்கோர் நிறுவனத்தின் சிரேஸ்ட நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் திரு யோ. சிவயோகராஜன் திட்ட உத்தியோகத்தர் திரு. அ. செல்வகுமார் மற்றும் கள உத்தியோகத்தர் செல்வி இ. குவிதர்சினி மற்றும் அழகுகலை அமைப்பின் தலைவி திருமதி வனிதா செல்லப்பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts