கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியில் விவசாய அறுவடைவிழா நடைபெற்றது.

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் நேரடியான கண்காணிப்பில் செயற்படும் கல்லடி விவேகானந்தா மகளீர்  கல்லூரியில் விவசாய அறுவடைவிழா நடைபெற்றது.இவ்விவசாய அறுவடைவிழாவானது கல்லூரியின் முதல்வர் திருமதி.திலகவதி ஹரிதாஸ் தலைமையில் கல்லூரியின் விவசாயத்தோட்டத்தில் வெள்ளிக்கிழமை(23.6.2018)காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

பேண்தகு அபிவிருத்தி திட்டத்தை பாடசாலையில் நடைமுறைப்படுத்தி அதன்மூலம்  பாடசாலை மாணவர்களை பேண்தகு அபிவிருத்தியில் இணைக்கும் வேலைத்திட்டம் இலங்கை கல்வி அமைச்சினால் நாடளாவியரீதியில் இருக்கும் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்களின் வழிகாட்டல்கள்,ஆலோசனைகளின் அடிப்படையில் கல்லூரியின் முதல்வர் திருமதி.திலகவதி ஹரிதாஸ் அவர்களின் தலைமைத்துவ ஒழுங்கமைப்பில் விவசாயப்பாட ஆசிரியர் பீ.மலர்வண்ணன் அவர்களின் முழுநேர அர்ப்பணிப்புடன் கல்லூரியின் மாணவர்களால்
செய்கை பண்ணப்பட்ட விவசாயப்பயிர்களிலிருந்தே  அறுவடைகள் நடைபெற்றது.

பேண்தகு அபிவிருத்தி விவசாய வேலைத்திட்டத்தினை மாணவர்களுக்கு தெரியப்படுத்தி நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்தும்,நஞ்சு இல்லாத உணவுகளை இனங்கண்டு அதன்மூலம் ஆரோக்கியமான சமூகமாகவும் வாழவேண்டிய கடற்பாடு ஒவ்வொரு மாணவர்களுக்கும் இருக்கின்றது.விவசாயத்தோட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட பீக்கு,புடோல்,பாகற்காய், கத்தரி,இலைகுலை வகைகள் இதன்போது அறுவடை செய்யப்பட்டது.

இவ்வருவடை நிகழ்வில் அதிபர் திருமதி. திலகவதி ஹரிதாஸ்,பிரதி அதிபர்கள்,ஆசிரியர்களான திருமதி.சாந்தி சிவலிங்கம்,திருமதி.தயா யோகராசா,திருமதி.கிரிசாந்தி நிமலன்,பீ.மலர்வண்ணன் மற்றும் மாணவர்கள்  பயிர்பொருட்களை அறுவடை செய்தார்கள்.குறித்த பாடசாலையில் குரங்குகளின் தொல்லை காணப்படுவதால் மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே இப்பயிர்ச்செய்கை செய்யப்பட்டு நுணுக்கமான முறையில் அறுவடை செய்யப்பட்டதாகும்.குரங்குத்தொல்லையிருந்து பாடசாலையின் விவசாயத்தோட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் அரச உயர் அதிகாரிகள் செயற்பட்டு குரங்கை கட்டுப்படுத்தி தருவதற்குரிய காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிபர் கோரிக்கையையும் முன்வைத்தார்.

?????
?????
?????

Related posts