சிறையில் அடைத்து வைத்திருக்கும் ஆனந்த சுதாகரனை ஜனாதிபதி விடுதலை செய்து இனநல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும்.

பெருன்பான்மை இனத்தை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரை ஜனாதிபதி விடுதலை செய்யலாம்.ஆனால் ஈழ விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அரசியல்கைதி ஆனந்த சுதாகரனை சிறையில் அடைத்து வைத்திருக்கலாம்.இது நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இன நல்லிணக்கமா..? என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதிதவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா கேள்வியெழுப்பியுள்ளார்.ஆனந்த சுதாகரனின் விடுதலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனயில்லாமல் செயற்படுவது நல்லாட்சி அரசாங்கத்திற்கு சாபக்கேடாக அமையக்கூடும்.ஆனந்த சுதாகரனை விடுதலை செய்து முதலில் ஜனாதிபதி இன நல்லிணக்கத்தை முன்மாதிரியாக பேணிப்பாதுக்க வேண்டும்.எனத்தெரிவித்தார்.

ஆனந்த சுதாகரனின் விடுதலை பற்றி அவரது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(19.6.2018)மாலை 5.00 மணியளவில் அவரை சந்தித்து கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடந்து பேசுகையில் :-வடகிழக்கில் உள்ள தமிழர்களின் போராட்டம் வாழ்க்கைப் போராட்டமாக மாறியுள்ளது.மண்ணுக்கு போராடியவர்கள்.தொடர்ச்சியாக போராட வேண்டிய தேவையுள்ளது.2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டாலும் தமிழர்களின் காணிப்பிரச்சனை,சிறைக்கைதிகளின் பிரச்சனை ,போன்றவற்றுக்கு போராட வேண்டிய தேவை தமிழ்தேசிய கூட்டமைப்புக்கே இருக்கின்றது.

ஈழவிடுதலைக்காக செயற்பட்டவர்களை சிறையில் அடைத்து வைத்திருப்பது நியாயமல்ல.சிறையில் அடைத்து வைத்திருக்கும் தமிழ் சிறைக்கைதிகளை முதலில் இனம்,மதம்,மொழி கடந்து விடுதலை செய்ய வேண்டும்.ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளின் நலனையும்,அன்பையும்,கருணையையும் புரிந்துகொண்டு ஜனாதிபதி அவர்கள் மனிதபிமான முறையில் விடுதலை செய்து சிறுபான்மையின மக்களோடு இனநல்லிணகக்தை கட்டியெழுப்பியிருக்கலாம்.ஆனால் ஜனாதிபதி அவ்வாறு இனநல்லிணக்த்துடன் தமிழ்மக்களுடன் செயற்படுக்கின்றார் என்பது தமிழ்மக்கள் மத்தியில் சந்தேகத்தையும், கேள்வியையும் எழுப்பியுள்ளது.

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்படவுள்ள உள்ளுராட்சி பிரதிநிதிகளுக்கு அவர்களின் பிரதேச அபிவிருத்திக்கு 50 இலட்சம் ரூபா ஒதுக்குவதாக ஜனாதிபதி  ஊடகங்கள் மத்தியில் தெரிவித்திருந்தார்.அதன்பின்பு அக்கருத்தை இரண்டு வாரங்களுக்கு பின்னர் மீள் பரிசிலனை செய்வதாக தெரிவித்திருந்தார்.பொறுப்பு வாய்ந்த உயர்பதவியில் இருக்கும் ஜனாதிபதி அவர்கள் வாய்க்கு ஏற்றாற்போல் வசைபாடுவது நல்லதல்ல.ஆனந்த சுதாகரனை விடுதலை செய்து தமிழ்மக்களுடன் ஜனாதிபதி இனநல்லிணக்கத்தை முறையாக பேணுவதன் மூலம்தான் நல்லாட்சியை தூரநோக்குடன் கொண்டு செல்லலாம்.இனநல்லிணக்கத்துடன் ஜனாதிபதி செயற்பட்டால்தான் அழிவடைந்த வடகிழக்கை கட்டியெழுப்பு முடியும்.வடகிழக்கு தமிழ்மக்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் சிறப்புடன் பணியாற்றுகின்றதா என்பது தமிழ்மக்களுக்கு சந்தேகமாக தோன்றியுள்ளது.சிறுபான்மையின தமிழ்மக்களை திருப்திபடுத்தும் வகையில் ஆனந்தசுதாகரனை விடுதலை செய்து காட்டட்டும்.அவர் இனநல்லிணக்கத்தை முறையாக பேணுகின்றார் என்பதை தமிழ்மக்கள்  புரிந்துகொள்ளும் வகையில் ஆனந்தசுதாகரனை  விடுதலை செய்யவேண்டும் எனத் தெரிவித்தார்.

Related posts