சுவிஸ் உதயம் அமைப்பினால் வளத்தாப்பிட்டி பாலர் பாடசாலை மாணவர்களுக்குப் புத்தகப் பைகள் வழங்கிவைப்பு

 

சுவிஸ் உதயம் அமைப்பினால் அம்பாரை வளத்தாப்பிட்டி கிறேஸ் அக்கடமிக் பாலர் பாடசாலையினைச் சேர்ந்த 50 மாணவர்களுக்குப் புத்தகப் பைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன
இந் நிகழ்வு 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை கிறேஸ் அக்கடமிக் பாலர் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
வளத்;ததாப்பிட்டிக் கிராமத்தில் வசிக்கின்ற மக்கள் 1989,1990 ஆண்டு காலப்பகுதியில் அம்பாரையில் உள்ள பல கிராமங்களில் பெரும்பான்மை இன மக்களோடு இணைந்து வசித்துவந்த போது நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தினால் இடம்பெயர்ந்து பின்னர் தங்களது இருப்பிடங்களில் குடியமர்த்தப்படாது வளத்தாப்பிட்டிக் கிராமத்தில் குடியமர்;த்தப்பட்டு வசித்து வருகின்றனர்.
இவர்கள் சுவிஸ் உதயம் அமைப்பிடம் வேண்டிக் கொண்டதற்கு இணங்கவே இவ் உதவி வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சுவிஸ் உதயத்தின் சுவிஸ் நாட்டின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் சுவிஸ் உதயத்தின் கிழக்;குமாகாணக்கிளைத் தலைவரும் ஓய்வு நிலை பிரதிக்கல்விப் பணிப்பாளருமான மு.விமலநாதன் சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணப் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்தோடு கற்பிக்கின்ற ஆசிரியர்கள் பல்வேறு கஷ்டத்தின் மத்தியில் கற்பித்து வருவதாகவும் தங்களுக்கு உதவிகள் வழங்குவதற்கு சுவிஸ் உதயம் போன்ற நல்லுள்ளம் படைத்த பலர் முன்வந்து உதவிகளை வழங்;குகின்ற போது இப்பிள்ளைகளை நல்லநிலைக்கு கொண்டுவரமுடியும் ஏன் என்றால் எங்களது இருப்பிடங்களை யுத்தத்தின் போது இழந்து அகதிகளாக்கப்பட்டபின்; சொந்த இடங்களுக்குச் செல்லமுடியாமல் காடு அடர்ந்த பகுதியாக இருந்த வளத்தாப்பிட்;டிக் கிராமத்தில் குடியேற்றப்பட்டு இன்று வசித்துவரும் எங்களது இந்தப் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவும் பட்சத்தில் மேலும் கல்வியில் முன்னேற்றமடையச் செய்யமுடியும் என அங்;கு கற்பிக்கின்ற ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts