சுவிஸ் உதயம் அமைப்பினால் சாதாரணதர மாணவர்களுக்கு இலவசக்கல்விக் கருத்தரங்கு.

இவ்வருடம் சாதாரணதரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் இலவசக் கல்விக்கருத்தரங்கு அவ் அமையத்தின் தலைவர் ஓய்வு நிலைப் பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் இருதினங்கள் நடைபெற்றது.

பட்டிருப்புக் கல்விவலயத்திற்குட்பட்ட கஷ்டப்பிரதேச மாணவர்களின் நன்மைகருதி ஞாற்றுக்கிழமை,திங்கட்கிழமை ஆகிய இருதினங்கள் 14 ஆம் கிராமம் கணேஷபுரம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் தம்பலவத்தை,சின்னவத்தை,ஆனைகட்டியவெளி,14 ஆம்கிராமம் உள்ளிட்ட பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதன் ஆரம்பநிகழ்வில் சுவிஸ் உதயத்தின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் 14 கணேசபுரம் மகாவித்தியாலய பிரதி அதிபர் சௌசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதேவேளை பின்தங்கிய பாடசாலைகளின் நன்மைகருதி கல்வி முன்னேற்றத்திற்காக பலவழிகளிலும் உதவிவருகின்ற சுவிஸ் உதயம் அமைப்புக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்

Related posts