ஞாயிறு தனியார் வகுப்புகளை தடைசெய்யவும்

ஞாயிற்றுக்கிழமைகளில் சமயம் தொடர்பான விழுமியக் கல்வியாக அறநெறிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சமய வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சில தனியார் நிறுவனங்களும் மற்றும் சில ஆசிரியர்களும் அறநெறிப்பாடசாலைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு சமயக் கல்விக்கு தடையாக இருக்கும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இவ்வாறு அம்பாறை மாவட்ட சிவநெறி அறப்பணிமன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் யுவஸ்ரீ கலாபாரதி வி.பிரவீன் இந்து சமய கலாசார திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார் அறநெறிப் பாடசாலைகளுக்கு ஏனைய மதத்தவர்கள் கொடுக்கின்ற பங்களிப்பைவிட மிகக்குறைந்தளவு பங்களிப்பையே இந்துக்கள் வழங்குகின்றனர்.

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரையுள்ள காலப்பகுதியில் தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

Related posts