நல்லாட்சியில் ஊடகங்களுக்குப் பாதுகாப்பில்லை: கவலையில் மஹிந்த

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் ஊடகங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெலிஅத்த பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழச்சியொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் தற்போது நடக்கும் குழப்பமான ஆட்சியில் ஊடகங்களும் அச்சுறுத்தப்படுகின்றன. அவை சுதந்திரமாக தமது செய்திகளை வெளியிட முடியாத நிலைமைகள் காணப்படுகின்றன.

செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதுடன், அவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுவதுடன், அவர்களுக்கான பாதுகாப்பும் இந்த அரசாங்கத்தில் இல்லை.

இது இந்த அரசாங்கத்தின் திட்டமிட்ட சதிச் செயலாகும். தமது ஆட்சியில் இடம்பெறும் ஊழல்கள் மற்றும் நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் செய்திகள் வெளிவராமல் தடுப்பதற்காகவே இவ்வாறு அரசாங்கம் செயற்படுகின்றது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Related posts