பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் 70 வது ஆண்டு நிறைவு விழா இடம்பெறவுள்ளது.

பாண்டிருப்பு கிராமத்தின் முதலாவது  சமூகசேவை அமைப்பாக 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்றுவரை சமூகப்பணியினை செய்துவரும் பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் 70வது ஆண்டு நிறைவு விழா மிகவும் சிறப்பான எதிர்வரும் 01.09.2018 சனிக்கிழமை பி.ப 4.30 மணிக்கு  நடைபெறவுள்ளது.

அமைப்பின் தற்போதைய தலைவர் பா.செ.புவிராஜா தலைமையில் பாண்டிருப்பு மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பாண்டிருப்பு கிராமத்தின் பல்வேறு துறைகளில் சேவையாற்றிய பலர்  கௌரவிக்கப்படவுள்ளதுடன்   மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் கடந்த 70 வருட கால வரலாற்றின் தொகுப்பாக நூல் ஒன்றும் வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.விமலநாதன் மற்றும் கௌரவ அதிதிகளாக கல்முனை மாநகரசபை முதல்வர் ஏ.எம். றக்கீப், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் சீ.ஜெயரூபன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் க.லவநாதன், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி இ.கணேஸ்வரன், பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு, மற்றும் சிறப்பு அதிதிகளாக கல்முனை மாநகரசபை உறுப்பினர் அ.விஜயரெத்தினம், பொன். சேல்வநாயகம், புவனேஸ்வரி விநாயகமூர்த்தி ஆகியோரும் கலந்து  சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் நெறியாள்கையில் மட்டக்களப்பு அரங்கம் ஆய்வு மையம் வழங்கும் ”தமிழிசை யாத்திரை” நிகழ்வும் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts