மட்டக்களப்பு மகிமைமிக்க மாமாங்ககேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்

மட்டக்களப்பிற்கே புகழ்தந்த மாமாங்கேஸ்வரர் ஆலையத்தின் 2020ம் ஆண்டு வருடாந்த திருவிழாவானது எதிர்வரும் சனிக்கிழமை (11-07-2020) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது வழமையில் பல்லாயிரக்கணக்கான பக்கதற்கள் புடைசுழ எமது மாமாங்கேஸ்வரரின் ஆலையத்தின் கொடியேற்றுவது வழமை இம்முறை உலகில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா நோய்த்தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சமூக இடைவெளியினை பேனப்படவேண்டும் என்ற சுகாதார திணைக்களத்தின் கட்டுபாடுகளை பின்பற்றும் நோக்கில் பக்தர்களுக்கான கட்டுப்பாடுகளுடன் குறைந்தளவான பக்தர்களுக்கான அனுமதியுடன் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நிருவாகத்தினரால் செய்யப்பட்டுள்ளது.
 
வரலாற்று புகழ்மிக்க மாமாங்கேஸ்வரர் பேராலையமானது மட்டக்களப்பு நகரில் இருந்து ஒரு மையில் தூரத்தில் அமிர்தகழி எனும் அழகிய கிராமத்தில் மூர்த்தி தலம் தீர்த்தம் எனும் முன்றையும் முறையே அமையப்பெற்ற பெருமையும் சிப்பும் இந்த மாமாங்கேஸ்வரருக்குண்டு.
 
மட்டக்களப்பில் மாமாங்கம் என்னும் கிராமத்திற்கும் அமிர்தகழி எனும் கிராமத்திற்கும் மத்தியில் அமைந்தமையினால் மாமாங்கேஸ்வரர் என்றும் தீராத நோய் தீர்க்கும் தீர்த்தம் கொண்ட அமிர்தகழி பதி என்றும் அழைப்பது வழமையாகும்.
 
மாமாங்கேஸ்வர ஆலையத்தில் எங்கும் இல்லாத சிறப்பு ஒன்று உண்டு ஆதிகாலத்தில் வேடுவர்களினால் ஆதி சுயம்பு லிங்க வழிபாடு நடைபெற்று வந்தமை வரலாறுகளில் இருந்து அறியக்கிடைக்கின்றது. அதனை தொடர்து வந்தகாலங்களில் விநாயகர் வழிபாடும் இடம்பெற்றமையால் அங்கு மூலஸ்தானத்தில் சிவலிங்கத்தின் முன்பாக விநாயகரைவைத்து பூசைசெய்யும் வழிபாடுதான் தற்போது நடைபெற்றுவருகின்றது.
 
இவ் ஆலயத்தின் நிவாகத்தினை ஏழு ஊர்மக்களினால் நிர்வகிக்கப்படவேண்டும் என எழுதப்பட்ட யாப்பாக உள்ளது இதனோடு கோட்டமுனையில் 150 பேருக்கு வாக்கு அழிக்கும் உரிமை வழங்ப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றது இதில் அமிர்தகழி மட்டிக்கழி புன்னச்சோலை பாலமீன்மடு நாவலடி சின்னஊறணி கருவப்பங்கேணி ஆகிய ஏழு கிராமங்களும்தான் நிவாகத்தினை செய்யமுடியும் எனவும் அதிலும் குருகுலவம்சத்தினர் மாத்திரம் தலைமைதாங்கும் வண்ணகர்களாக பதவிவகிக்கலாம் என்றும் யாப்பில் கூறப்பட்டுள்ளது.
 
கொடியேற்றத்திருவிழாவானது ஆதிகாலம் தொட்டு கொவில் பிரதமகுருவின் திருவிழாவாத்தான் இருந்து வந்தது அது தற்போது நீர்ப்பாசன திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அத்திருவிழாவை நடாத்தி வருகின்றனர். கோட்டமுனை வேளாளர் சமூகத்தினருடையது தீர்த்த திரு விழாவாக தற்போதும் நடத்தப்பட்டுவருகின்றனர். ஆடி அமாவாசைதீர்த்தம் மாமாங்கத்தில் சிறப்பு இதில் தந்தையை இளந்தவர்கள் பிதீர்கடன் தீர்ப்பதற்கு இவ்வாலையத்தில் அலைகடலாக பக்தர்கள் திரண்டுவருவார்கள் அதுவே சிறப்பு.
இராவணனை வதம் செய்துவிட்டு இலங்காபுரிக்கு வந்த இராமபிரான் திருகோணமலையில் இருந்து இங்குவந்தவேளை வழிபாட்டுக்காக அனுமான் அமைத்துக்கொடுத்த சிவலிங்கம் என்றும் வேடுவர்கள் அமைத்து வழிபட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன. இராமபிரான் பூசைசெய்வதற்கு கொளதண்டம் தீர்த்தம் கண்டதாகவும் அதுவே நாளடைவில் தற்போது உள்ள அமிர்தகழி சந்தன தீர்தமாகும்.
 
ஆடகசவூந்தரி எனும் இந்திய சாம்ராச்சியத்தின் அரசிக்கு பிரப்பிலே மூன்று முலைகளுடன் பிறந்ததாகவும் அவருடைய உடல் விகாரத்தினை நீக்குவதற்காக இராமபிரானின் புணித தலத்தினை தரிசித்தால் தீராதநோய் தீரும் என்று அறிந்து இந்தியாவில் இருந்து ஓடத்தில் கடல்வழியாகவந்து அமிர்தகழியில் இறங்கியதாகவும் அவ்விடத்திற்கு ஓடக்கரை வீதி என்று இப்போதும் அழைக்கப்பட்டுவருகின்றது.  ஆய்வாரள்களின் கருத்துப்படி அவ்விடத்தில் கடல் இருந்திருக்கலாம் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதாம்.
 
தீராத நோய்திற்கும் தீர்தமாதலால் ஆடகசவூந்தரியின் அவலட்சனமான உருவமைப்பானது இத்தீர்த்தமாடியதனால் நீங்கியதாகவும் பின்னர் தனக்கு அழகிய வனப்புமிகு எழில் உடல் கிடைக்கப்பெற்றதாகவும் வரலாறுகள் கூறுகின்றது. அந்தவகையில் தீராத நோய் தீர்க்கும் தீர்த்தம் என இத்தீர்தத்திற்கு பெருமையுள்ளது
 
மட்டுநகர் மாநிலத்தை அரசு செய்த மாதரசன் கழுத்தினிலே இருந்த மச்சம் சட்டெனவே மாற்றிய நற்றீ;த்தங் கண்டேன் சங்கரனார் சுயம்புலிங்கக் காட்சி கண்டேன். ஏன்றும்
 
பேராதனில் வென்று நின்ற ராமன்கொண்ட பிரமகத்தி தோ~மது நீங்கும் வண்ணம் பாரதமே சென்று பல தீர்த்தங்கொண்டு பாங்கான அமிர்தநதிக் குளமும் தொட்டதெங்கு செறி அமிர்தகழிப்பதியின் ஓர்பால் தீராத நோய் தீர்க்கும் தீர்த்தம் எனவும் பாடல் பெற்றபெருமை மிக்கதலமாகும்.  

Related posts