முத்துமாரியம்மன் இசைமாலை இறுவட்டு வெளியீட்டு விழா

வெல்லாவெளி அருள்மிகு முத்துமாரியம்மன் மீது பாடப்பட்ட 09 பக்திப் பாடல்களை உள்ளடக்கிய இறுவட்டு வெளியீடு 29.06.2019 சனிக்கிழமை வெல்லாவெளி மத்திய கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

த.விவேகானந்தம் (ஓய்வு நிலை அதிபர்) தலைமையில், சிவசிறி சி.கு. சாம்பசிவக் குருக்களின் ஆசியுரையுடனும், பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய மாணவர்களின் வரவேற்பு நடனத்துடனும், வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலய அதிபர் ச.கணேசமூர்த்தியின் வரவேற்புரையுடனும் ஆரம்பமாகிய இவ்விழாவில் முதன்மை அதிதிகளாக போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி, உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் சட்டத்தரணி மு. கணேசராசா, மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி, வெல்லாவெளி முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் சி.கணேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இறுவட்டின் முதல் பிரதியினை மட்டக்களப்பு விஜேய் கொன்ஸ்ரக்ஷன் நிறுவன ஸ்தாபகர் இ.விநாயகமூர்த்தி  பெற்றுக் கொண்டார்.

இப்பாடல்களை ஆதவன் எஸ்.ஞானப்பிரகாசம், கலாநிதி சியாமளாங்கி கருணாகரன், திருமதி சாந்தினி தருமநாதன், எம்.வினோகரன், கே.சிவாகரன், செல்வி நீரஜா செல்வராஜா, ஏ. செல்வகுமார், ரி.சாந்தகுமார், செல்வன் செ.விகாஸ் ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்நிகழ்வில் பாடல்களை எழுதிய கவிக்கோ வெல்லவூர்க் கோபால், வெல்லாவெளி இந்து சமய அபிவிருத்திக் கழகத்தினரால் கொளரவிக்கப்பட்டதுடன் இப்பாடல்களுக்கு இசை வழங்கிய ஏ. செல்வகுமார் மற்றும் பாடகர்கள் வெல்லாவெளி முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபையினரால் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் முன்னால்  ஆலய பரிபாலன சபையின் தலைவர்களாக திகழ்ந்த சா.விநாயகமூர்த்தி, ச.அழகிப்போடி, ஆ.நாகலிங்கம், த. ஜெயநாதன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.
இசைமாலை இறுவட்டு வெளியீட்டிற்கான அனுசரணையினை வெல்லாவெளி முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபையினர் வழங்கியிருந்தனர். இசைமாலை இறுவட்டு ஆக்கத்திற்கான அனுசரணையினை அமரர்களான சீனித்தம்பி கணபதிப்பிள்ளை, தவமணி கணபதிப்பிள்ளை ஆகியோரின் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts