வலயக்கல்வி பணிப்பாளர் பாஸ்கரனுக்கு மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட மணிவிழா

அகவை அறுபதில் காலடியெடுத்து வைத்து,மட்டக்களப்பு மண்ணுக்கு எல்லோரும் போற்றத்தக்க வகையில் குறைவில்லாத நிறைவான கல்விச் செல்வத்தை ஊட்டிவிட்டு;ஓய்வு பெற்றுச் செல்லும் வலயக்கல்வி பணிப்பாளர் பாஸ்கரனுக்கு மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட  மணிவிழா சிறப்பாக இடம்பெற்றது

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றும் வீ.லவக்குமார் தலைமையிலான உடற்கல்வி ஆசிரியர்களின் சிறப்பான திட்டமிடலுடன் மணிவிழா கடந்த சனிக்கிழமை வின்சன்ட் உயர்தர பெண்கள் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளரும்,மணிவிழாக்குழுத் தலைவருவுமான வீ.லவக்குமார் தலமையில் பிற்பகல் 3.00 மணியளவில் குறிக்கோள் தவறாமல் சரியான நேரத்துக்கு சிறப்பாகவும்,எழுச்சியாகவும் இடம்பெற்றது.
முதலில் வலயக்கல்வி பணிப்பாளர் கணபதிப்பிள்ளை-பாஸ்கரன் அவர்களையும்,அவரது தாயாரையும்,துணைவியாரையும்,உற்றார் உறவினர்களையும் கல்விச்சமூகம் புடைசூழ்ந்து மாலை அணிவித்து பாரம்பரிய கலை,கலாச்சார,பேண்ட் வாத்தியங்கள் முழங்க பாடசாலைக்கு அழைத்து வந்தார்கள்.
இதனைத்தொடர்ந்து கல்வியாளர்கள்,புத்திஜீவிகள் சங்கமித்து மங்கல விளக்கேற்றப்பட்டு,60 தீபங்கள் ஏற்றப்பட்டும்,உடற்கல்வி ஆசிரியர்களின் பிள்ளைகளினால் இறைவணக்கம் இடம்பெற்றது.உடற்கல்வி ஆசிரியை திருமதி. சிவலோஜினி வினோதனின் வரவேற்பு நடனத்தை நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கண்டுகளித்தார்கள்.மும்மத அனுட்டானத்துடன் தலைமையுரையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஓய்வு பெற்றுச்செல்லும் வலயக்கல்வி பணிப்பாளரின் கல்விச்சேவை,சமூகசிந்தனை,கல்விப்புலம் என்பனவற்றை நிகழ்வில் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்,அரசாங்க அதிபர் மா.உதயகுமார்,கல்வி அமைச்சின் பணிப்பாளர் பாலித இளங்கசிங்க,கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் வெ.தவராசா மற்றும் உதவிச் செயலாளர் ச.நவநீதன்,மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.மன்சூர்,மேலதிக கல்விப்பணிப்பாளர் எஸ்.மனோகரன்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,  கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு மா.கு சச்சிதானந்தக் குருக்கள்,”கவிஞர் வெல்லவூர் கோபால்”- எஸ்.கோபாலசிங்கம்,களுதாவளை சுயம்புலிங்க ஆலய முன்னாள் வண்ணக்கர் ப.குணசேகரம் ஆகியோர்களினால் வாழ்த்துரை நிகழ்த்தப்பட்டது.
வலயத்தில் உள்ள அதிபர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,வலயக்கல்வி அலுவலக உத்தியோகஸ்தர்கள்,வர்த்தகர்கள்,ஓய்வுநிலை கல்வி அதிகாரிகள்,உத்தியோகஸ்தர்கள் அனைவரும் வலயக்கல்வி பணிப்பாளரை கட்டியணைத்து வாஞ்சையுடன் பாராட்டியும்,பொன்னாடை போற்றியும் கௌரவித்தார்கள்.
மட்டக்களப்பு மண்ணிலே இவ்வாறான மணிவிழா முதற்தடவையாக நடைபெற்றமை கல்விச்சமூகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுக்கொண்டதாகும்.இதற்குரிய அத்தனை பொறுப்பும்,திட்டமிடலும் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் உடற்கல்வி ஆசிரியர்களுக்கே உண்டு என்பது மிகையாகாது.
வலயக்கல்வி பணிப்பாளரின் மணிவிழாவின்போது ஆசிரியர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்ட கலை,கலாச்சார நிகழ்வுகளும் பார்ப்போரை மெய்சிலிக்க வைத்து பாராட்டைப் பெற்றுக்கொண்டார்கள்.
“தொண்டனாகிய தலைவன்” எனும் மணிவிழா மலரும் வெளியீட்டு வைக்கப்பட்டது. உடற்கல்வி ஆசிரியை திருமதி. வீ.கருணாகரனின் வெளியீட்டு உரை,நன்றியுரையுடன் மணிவிழா முற்றுப்பெற்றது.இம்மணிவிழா நிகழ்வானது தொடர் நாடக சீரியலாக இடம்பெற்றமை விஷேட அம்சமாகும்.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் உயரதிகாரிகள்,திணைக்களத்தலைவர்கள்,பிரதிக்கல்வி பணிப்பாளர்கள்,உதவிக்கல்வி பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள்,வலயக்கல்வி அலுவலகத்தின் உத்தியோகஸ்தர்கள்,ஓய்வுநிலை கல்வியாளர்கள்,வர்த்தகர்கள்,மும்மதத் தலைவர்கள்,ஊடகவியலாளர் கலந்துகொண்டார்கள்.

Related posts