வாகனங்களுக்கு புதிய ரக எரிபொருள்

யூரோ 4 ரக எரிபொருள் நாளை முதல் நாட்டின் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய ரக எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தைகளில் காணப்படும் ஒக்டேன் 95 ரக பெற்றோல், மற்றும் சுப்பர் டீசல் ஆகியன சந்தைகளிலிருந்து அகற்றப்படும் என அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

யூரோ 4 ரக எரிபொருள் பாவனையினால், வௌியேறும் புகையின் அளவு குறைவடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த எரிபொருளை, ஒரு வாரத்திற்குள் நாடு முழுவதுமுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தைகளில் யூரோ 4 ரக எரிபொருளின் விலை அதிகரித்துள்ள போதிலும், சுப்பர் டீசல் விற்பனை செய்யப்படும் விலைக்கே, யூரோ 4 எரிபொருள் விற்பனை செய்யப்படும் என உபாலி மாரசிங்க கூறியுள்ளார்.

அத்துடன் இதனை அனைத்து ரக வாகனங்களுக்கும் பயன்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts