ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் தொடர்பில் குழப்பத்தில் ரணில் அரசு!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை ( Batticaloa Campus ) சுவீகரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள் கருத்து முரண்பாடுகள் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்திலுள்ள சிலர் குறித்த பல்கலைக்கழகத்தை அரசாங்கத்தை சுவீகரிக்கவேண்டுமெனவும் மற்றொரு பகுதியினர் உயர்கல்வியமைச்சின் கண்காணிப்பின் கீழ் அது தனியார் பல்கலைக்கழகமாக தொடரந்து இயங்கவேண்டுமெனவும் தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க உட்பட மற்றும் சிலர் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் சுவீகரிக்கவேண்டுமென தெரிவித்துவரும் அதேவேளை மற்றொரு தொகுதி அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, ராஸித சேனாரத்ன உட்பட சிலர் அது தனியார் பல்கலைக்கழகமாக தொடர்ந்து இயங்கவேண்டுமென தெரிவித்து வருகின்றனர்.

இதனால் அந்த பல்கலைக்கழகம் தொடர்பில் முடிவெடுக்க முடியாமல் அரசாங்கம் தடுமாறி வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts