இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற 4 பேர் கைது

80 லட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய தங்கத்தை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை டுபாயில் இருந்து வருகை தந்த இலங்கை பிரஜையான பெண்ணொருவரே கைது செய்யப்பட்டதாக பிரதி சுங்க ஊடகப்பேச்சாளர் விபுல மினுவன்பிடிய தெரிவித்துள்ளார்.

54 வயதுடைய, வரகாபொல பகுதியைச் சேர்ந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.

1 கிலோ 243 கிராம் நிறையுடைய தங்க ஆபரணங்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுங்கப்பிரிவினர் முன்னெடுத்துள்ளதாக பிரதி சுங்க ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related posts