ஊடக தலைவரை கைது செய்ய வேண்டும் – மைத்திரியின் கோரிக்கை

ஜனாதிபதிக்கு எதிராக  கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வந்த லங்கா இ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் பிரதீப் சந்துருவன் சேனாதீரவை கைது செய்யுமாறு  அல்லது நாட்டுக்கு திருப்பி அனுப்புமாறு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவிடம் கோரியுள்ளார்.

ஜனாதிபதிக்கும் கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிசுக்கும் இடையில் சந்திப்பொன்று  (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளதாவது,

“குறித்த இணையத்தளம்  இலங்கைக்கு வெளியே  லண்டனைத் தளமாக கொண்டு இயங்குகின்றமையினால் அதற்கு எதிராக எந்ததொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது” என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர்  சிறிலால் லக்திலக மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன ஆகியோரும் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது.

லங்கா இ நியூஸ் இணையத்தளம், ஜனாதிபதியையும் அவரது குடும்ப உறுப்பினரையும் தொடர்ச்சியாக விமர்சித்து வந்தமையினால் கடந்த நவம்பர்  மாதம்  முதல் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் தடை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts