இன்று காரைதீவில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 142 ஆவது குருபூஜை நிகழ்வு

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 142 ஆவது குருபூஜை தினவிழா,  இன்று  (27) சனிக்கிழமை காலை காரைதீவு சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில்  நடைபெறவுள்ளது.
 
 இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும், சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்தப் பணிமன்றமும் இணைந்து ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூஜை தினவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.
 
மங்கல விளக்கேற்றல், நந்திக்கொடியேற்றல், அறநெறிக் கீதம், குருபூஜை வழிபாடுகளோடு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வு, காரைதீவுப் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் நடைபெறவுள்ளது.
 
 காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக் குருக்கள் திருமுன்னிலை வகிக்க, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கிறார்.

இந்த நிகழ்விலே, சிறப்பு அதிதிகளாக பணிமன்றத்தலைவர் வெ.ஜெயநாதன், கல்விப்பணிப்பாளர்களான சோ.சுரநுதன்(திருக்கோவில்வலயம்) ,ஆ.சஞ்சீவன் (கல்முனைவலயம்),வி.ரி.சகாதேவராஜா(சம்மாந்துறைவலயம்) ஆகியோர் கலந்துசிறப்பிப்பார்கள்.

ஆன்மிக அதிதிகள் ,விஷேட அதிதிகள் எனப் பலரும் கலந்து கொள்ளும் இந்நிகழ்விலே, மாணவர்களின் ஆளுமைத்திறன் வெளிக்கொணர்வு நிகழ்வுகளும் அவர்களுக்கான பாராட்டு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
 
இந்நிகழ்வில், வரவேற்புரையினை அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.ஜெயராஜி நிகழ்த்த ,நன்றியுரையினை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஸ்ரீபிரியா கங்கைநாயகன் நிகழ்த்தவுள்ளனர்.

Related posts