இறக்காமத்தில் முயற்சியாண்மை அபிவிருத்தி செயற்திட்டத்திற்கான நேர்முகப் பரீட்சை !

சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக முயற்சியாண்மை அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஊடாக கடன் உதவிகள் வழங்குவதற்கான சமுர்த்தி பயனாளிகளை தெரிவு செய்யவதற்கான நேர்முகப் பரீட்சை கடந்த  வியாழக் கிழமை இறக்காமம் பிரதேச செயலக தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் எம்.சி.எம் தஸ்லீம், சமுர்த்தி திட்ட முகாமையாளர் திருமதி பிரியந்தி வேரகொட ஆகியோர்  முன்னிலையில் நேர்முகப் பரீட்சை இறக்காமம் பிரதேச செயலக கூட்டமண்டபத்தில் நடைபெற்றது.
 
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் சமுர்த்தி பெறும் பயனாளிகளின் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் நடாத்தி வருகின்றது. ஜனாதிபதியின் சௌபாகியா திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகளின் தொழில் முயற்சியை ஊக்கப்படுத்த கடன் உதவிகள் தற்போது வழங்கிவருகின்றது. அதன் தொடர்ச்சியாகவே இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் சமுர்த்திப் பிரிவு உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related posts