இந்துக்கள் அனுஸ்டிக்கும் சிவவிரதங்களுள் ஒன்றான திருவெம்பாவை விரதத்தின் இறுதிநாள் நிகழ்வான திருவாதிரை தீர்த்தோற்சவம் இன்று(20)திங்கள் ஆகும்.
காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் கடந்த ஒன்பது தினங்களாக ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் தலைமையில் நடைபெற்றுவந்த திருவெம்பாவை விரத பூஜையானது, இன்று(20) ஆலய தீர்த்தக்கிணற்றில் திருவாதிரை தீர்த்தமாடுவதுடன் நிறைவடையவுள்ளது.
நேற்றையதினம் அதிகாலை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் விசேடபூஜை செய்வதையும், பக்தஅடியார்கள் பங்கேற்பதையும் இங்கு காணலாம்.
இன்று இந்து ஆலயங்கள் தோறும் திருவாதிரை தீர்த்தோற்சவம் இடம்பெறும்.
இதனை, ஆருத்ராதரிசனம் என்றும் அழைப்பர்.ஆருத்ரா தரிசனம் கண்டால் எல்லா பாவங்களும் நீங்கி நீங்கா புண்ணியம் பெற்றிடலாம்.
தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.