உலகத்தில் பிறந்த மனிதர்களிடம் அறநெறி சார்ந்த நல்லெண்ணங்களும்,அறநெறி சார்ந்த உண்மையான அறிவு விடயங்களும் போதியளவு இல்லாததால்தான் மனித சமூகம் மனிதர்களுக்கு கொடுமைகளை இழைக்கின்றது.சிறுவர் கொடுமைகள்,கொலைகள்,களவுகள்,அநி
கல்லடி பூநொச்சிமுனையைச் சேர்ந்தவரும்,பிரபல சமூகசேவையாளருமான வேலுப்பிள்ளை-சிவபாதசுந்தரம் அவர்களினால் தொகுப்பட்ட “ஔவையின் அமுதமொழிகள்” நூல் வெளியீட்டுவிழா கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(12.10.2018) காலை 10.00 மணியளவில் கல்லடி இராமகிருஸ்ணமிஷன் சுவாமி ஸ்ரீமத் தக்ஷானந்தாஜீ மகராஜ் அவர்களின் ஆசியுரையுடன் “அதிபர் திலகம்” திருமதி. திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்டு பேசுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் :-இன்றைய சமூகத்தில் உள்ளவர்களுக்கு போதியளவு அறநெறி சார்ந்த கருத்துக்கள் ஊட்டப்பட வேண்டும்.அவ்வாறு அறநெறி சார்ந்த ஆழமான கருத்துக்களினால்தான் மனித சமூகத்தை வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்க முடியும்.முன்னைய காலத்தில் வாழ்ந்தவர்கள் அறநெறி கல்வியை சிறப்பாக படித்து அதன்மூலம் நல்லெண்ணத்துடன் சமூகத்தில் ஒழுக்கமாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.
இன்றைய சமூகத்தினரிடம் அறநெறிக்கல்வியானது அருகிற்கொண்டு செல்வதை காணக்கூடியதாகவுள்ளது.சமூகத்தி
ஔவையின் அமுதமொழிகள் நூலானது ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்புடன் இன்று வெளியீட்டு வைக்கப்பட்டது. இதனை மாணவர்கள்,பெரியோர்கள் விரும்பி படிக்கவேண்டும்.இது எங்களை வளப்படுத்துவற்கும்,ஆளுமையாளர்