ஆரையம்பதியைச் சேர்ந்த நா.இதயராஜன் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார்

மட்டக்களப்பு ஆரையம்பதியை வசிப்பிடமாக கொண்டவரும்,கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் அரசியல் விஞ்ஞான ஆசிரியருமான நாகராஜா-இதயராஜன் அவர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் கடந்த 2018.10.5ம் திகதியன்று அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

மட்டக்களப்பு அமிர்தகழியை பிறப்பிடமாக கொண்ட இவர் 1966.9.7 திகதி பிறந்துள்ளார்.தனது ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணம் நவீல்ட் பாடசாலையிலும்,இடைநிலைக்கல்வியை யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும்,உயர்தரக்கல்வியை சாவகச்சேரி டிவேக் கல்லூரியிலும் படித்துள்ளார்.

இவர் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியான நா.இதயராஜன் அவர்கள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமானியையும் படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

“தனக்கும் பிறவியிலே  பார்வையிழக்கப்பட்டு தான் அனுபவித்த துன்பத்தை மற்றவர்கள் அனுபவிக்க கூடாது”எனும் பரந்துபட்ட சிந்தனையுடனும், பார்வையற்ற சமூகத்திற்கு உதவிசெய்யனும் எனும் உன்னதநோக்கிலும், அவர்களுக்கு பிரகாசமான ஒளியையும்,கல்வியையும் கொடுக்கவேண்டும் எனும் தூரநோக்குடைய எண்ணத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தரிசனத்தை அமைப்பதற்கு மூலமாக செயற்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வசதி குறைந்த,வறுமையான மாணவர்களை தான் கற்பிக்கும் பாடசாலையிலும்,தனது கிராமத்திலும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இலவசமாக கல்வி புகட்டி வருகின்றார்.பணம் கொடுத்து தங்களின் பிள்ளைகளை படிப்பிக்கும் இக்காலத்தில் எதுவித பணமும் வாங்காமல் இலவசமாக படிப்பிக்கும்  போற்றத்தக்க ஆசிரியராக, ஆசிரியர்களின் மத்தியில் முதன்மையாளராக இவர் திகழ்கின்றார்.

தனது பாடசாலையில் முழுமையான கற்பித்தலை முடித்துவிட்டு பாடசாலை முடிந்ததும்,தான் உருவாக்கிய தரிசனத்துக்கு சென்று அங்கு நிருவாக முகாமைத்துவம் செய்து மேலதிகமாகவும் தரிசன மாணவர்களுக்கு கல்வியை மட்டுமல்ல;அறநெறியையும் “தேனும் திணையுமாக” விருப்பதுடன் ஊட்டி படிப்பிக்கும் ஆசானும் ஆவார்.

இவர் உருவாக்கிய தரிசனத்தில் இருந்து இதுவரையும் 28 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.அவற்றில் 15பேர் அரச உத்தியோகம் பார்க்கின்றார்கள்.கிழக்கு மாகாணத்தில் விழிப்புணர்வு அற்ற மாணவர்களின் எதிர்காலத்திற்கும்,அவர்களுக்கு சிறந்ததொரு வழிகாட்டல்களையும்,ஆலோசனைகளையும் வழங்குவதற்கு அகில இலங்கை சமாதான நீதவானும்,ஆசிரியருமான நா.இதயராஜன் முனைப்புடன் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்.

Related posts