தென்கிழக்கு பல்லைக்கழக பொறியியல் பீடமாணவர்களின் பிரச்சனைக்கு தீர்வு

தென்கிழக்கு பல்லைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த மாணவர்களிற்கு பொறியியலாளர் நியமனம் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் நிலையினை நேரடியாக தலையிட்டு தீர்த்து வைத்தார் அமைச்சர் .மனோகணேசன்

இலங்கை பொறியிலாளர் சேவையில் பொறியலாளர்  தரம் 3ற்கு பொறியிலாளர்களை இணைத்துக்கொள்வதற்கு போட்டிப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்திருந்தும் குறித்த பதவிக்கு நியமனத்தினை பெற முடியாத சிக்கல் நிலையினை முகம் கொடுத்திருந்த தென்கிழக்கு பல்லைக்கழகத்தின்  பொறியில் மாணவர்கள் தங்களுடைய சிக்கல் நிலையினை தேசிய ஒருமைப்பாடுஇ நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இணைப்பாளர் திரு.கணேசமூர்த்தி கோபிநாத் அவர்களின்  ஊடாக தேசிய ஒருமைப்பாடுஇ நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் கௌரவ மனோ கணேசன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.

அமைச்சர் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் உடனடியாக தொடர்பு கொண்டு நிலையினை எடுத்துக்கூறி மேற்கொண்ட துரித செயற்பாட்டின் காரணமாக குறித்த பரீட்சையில் சித்தியடைந்தமைக்கான பதவி நியமனம் தென்கிழக்கு பல்கலைக்கழகமானது இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தில் (ஐ.ஈ.எஸ்.எல்) பதிவு செய்யப்பட்டவுடன் வழங்கப்படும் என பொதுச்சேவை ஆணைக்குழுவினர் உறுதியளிக்கப்பட்டிருந்தது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2011ம் ஆண்டு பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இம்முறை இச்சிக்கலின் ஊடாக பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தமிழ் மாணவர்களாக காணப்பட்டிருந்தனர். அத்தொடு இவ்வாறானதொரு தீர்வு கிடைத்திருக்காத பட்சத்தில் மீண்டும் இலங்கை பொறியிலாளர் சேவையில் பொறியலாளர் – தரம்-3ற்கு பொறியிலாளர்களை இணைத்துக்கொள்வதற்கு போட்டிப் பரீட்சைக்கு தோற்றி தகுதியினைப் பெறும் சந்தற்பத்திலேயே அவர்கள் குறித்த நியமனத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்படத்தக்க விடயமாகும்.

குறித்த பிரச்சினைக்கு முகம்கொடுத்திருந்த பொறியியல் பட்டதாரிகளிற்கான நியமனம் அண்மையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related posts