உதயமாகின்றது வாகரை மாவீரர் துயிலும் இல்லத்துக்குரிய மீள் நிர்மானிப்பு மற்றும் நினைவேந்தல் குழு 

எதிர்வரும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்விற்கான வாகரை மாவீரர் துயிலும் இல்லத்துக்குரிய மீள் நிர்மானிப்பு மற்றும் நினைவேந்தல் குழு  27 வாகரை கண்டலடி துயிலுமில்லத்தில் சம்பிரதாயபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டது.
இதன் போது வாகரை பிரதேச கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர்கள், அங்கத்தவர்கள் , மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் போராளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு கூடிய மக்களால் நினைவேந்தல் குழு உருவாக்கப்பட வேண்டும் என தீர்மானித்தற்கமைய இக்குழு உருவாக்கம் பெற்றது.
அதனடிப்படையில் அனைத்து மக்களும் ஏகமனதாக இக்குழுவின் தலைவராக வாகரை கண்டலடி கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் இராசையா யோகேஸ்வரனை தெரிவு செய்ததுடன் செயலாளராக வாகரை கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் பத்தக்கொடி உதயகுமார் பொருளாளராக மாவீரர் ஒருவரின் மனைவியான யோகேஸ்வரன் ஜெயலெட்சுமி  உப தலைவராக புளியங்கண்டலடி கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் கந்தசாமி லதாகரன் உப செயலாளராக  கண்டலடி கிராம அபிவிருத்தி சங்கசெயலாளருமான நல்லதம்பி லியோஜன் மற்றும் செயற்பாட்டாளர்கள் என 21க்கு மேற்பட்டவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்
அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் துயிலுமில்ல துப்பரவுப்பணிகள் தொடக்கம் 27.11.2018 அன்றைய மாவீரர்  நினைவேந்தல்  நிகழ்வுவரை இக்குழுவினர் செயற்படவுள்ளமை குறுப்பிடத்தக்கது.

Related posts