மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் “எதிர்பார்ப்புக்கள் நிறைந்த வருடாந்த பரிசளிப்பு விழா” நடைபெற்றது

மட்டக்களப்பு  மெதடிஸ்த மத்திய    கல்லூரியின் எதிர்பார்ப்புக்கள் நிறைந்த “வருடாந்த பரிசளிப்புவிழா” கல்லூரி அதிபர் இராசதுரை-பாஸ்கர் தலைமையில்  கல்லூரி பிரதான மண்டபத்தில் வெள்ளிக்கிழமை(26.10.2018)காலை 10.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் வருகைதந்த அதிதிகளை முதலில்  மாலை அணிவித்து,எமது கலை,கலாச்சார பண்பாட்டு முறையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
இதன்பின்னர் கல்லூரியில் தேசியக்கொடி,பாடசாலைக்கொடி ஏற்றப்பட்டு,தேசியகீதம் இசைக்கப்பட்டது.மங்கல விளக்கேற்றல்,மும்மத அனுட்டானங்கள்,வரவேற்புரை,தலைமையுரை,பரிசளிப்புக்கள்,அதிதிகள் உரைகள், மாணவர்களின்  கலை,கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட பரீட்சைகளிலும்,இணைப்பாட விதானச் செயற்பாடுகளிலும் சாதனை படைத்த மாணவர்களையும்,புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், க.பொ.சாதாரண தரத்தில் சித்தியடைந்து உயர்தரம் கற்கும் மாணவர்களும்,மற்றும் உயர்தர பரீட்சைகளில் சித்தியடைந்து சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களையும் கௌரவித்து   பரிசில்களும் , சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .

வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக  கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் முதல்வரும், மெதடிஸ்த மத்திய    கல்லூரியின் பழைய மாணவனுமான கலாநிதி வள்ளிபுரம்-கனகசிங்கம் அவர்களும்,விஷேட அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்களும்,கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாலர் பாடசாலை பணியக செயலாற்றுப் பணிப்பாளரும்,பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான எஸ்.சசிகரன்,மண்முனை வடக்கு கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஏ.அருள்பிரகாசம்,பொறியியலாளர் கே.கிருபாகரன்,மற்றும் முன்னாள் அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தலைவர் எந்திரி வை.கோபிநாத்,எந்திரி என்.திருவருட்செல்வம்,ஊடகவியலாளர்கள்,பிரதி அதிபர்களான இ.இலங்கேஸ்வரன்,எஸ்.சதீஸ்வரன்,
மெதடிஸ்த மத்தியகல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் உபதலைவர்,பழையமாணவர்கள்,மும்மதத்தலைவர்கள்,கல்லூரி ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள், கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள்,சாரணர் மாணவர்கள்,என பலர்  கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் விஷேட அம்சமாக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கணபதிப்பிள்ளை-பாஸ்கரன் அவர்கள் இவ்வருடம் டிசம்பர் மாதம் 5ம் திகதி பதவியிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லவுள்ளார்.வலயக்கல்வி பணிப்பாளரின் கல்விச்சேவையானது வலயத்திற்கு மட்டுமல்ல இவ்வலயத்தில் உள்ள 63 பாடசாலைகளுக்கும்,இன்றைய கல்விச்சமூகத்திற்கும் காத்திரமானதாகும்.வலயக்கல்வி பணிப்பாளரின் அர்ப்பணிப்பான சேவையை கல்லூரியின் அதிபர் இராசதுரை-பாஸ்கர் தலைமையிலான பாடசாலை நிருவாகம்,மற்றும் பாடசாலை பழையமாணவர்கள்,அபிவிருத்திக்குழுவினர் இணைந்து மலர்மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.

Related posts