அதனைத் தொடர்ந்து காத்தான்குடி – 06 பதுரியா ஜூம்மா பள்ளிவாயல்
உள்ளிட்ட மதஸ்தலங்களுக்கு ஜனாதிபதி செயலணியின் தலைவர் ராஜகீய பண்டித சங்கைக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை மத வழிபாட்டுத் தலங்களுக்கும் செயலணியின் உறுப்பினர்களை சென்று சுமூகமாக கலந்துரையாடியுள்ளனர். இதன்போது விசேட மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றதுடன், ஆசிர்வாதமும் அளிக்கப்பட்டது.
மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டு கலந்துரையாடல்களில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த செயலணியின் தலைவர் ராஜகீய பண்டித சங்கைக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிடுகையில், நீண்டகாலமாக நிலவி வருகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்காக தற்போதைய ஜனாதிபதி அவர்கள் நேர்மையாக முயற்சிப்பதாகவும் உண்மையான அமைதி, நல்லிணக்கத்தை எதிர்பார்க்கின்ற பௌத்த தேரர்கள், தமிழ் பூசகர்கள், முஸ்லிம் மௌலவிமார்கள், கிறிஸ்துவ பாதிரிமார்கள் உள்ளிட்ட அனைத்து மதத் தலைவர்களும் ஒருசேர ஒரே நாடு ஒரே சட்டத்தைக் கேட்டு, இச்சந்தர்ப்பத்தில் முன்னின்று செயற்பட வேண்டுமென தேரர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.