கொவிட்-19 கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் பல பாகங்களிலும் வாழ்வாதாரத்தினை இழந்து வாழும் குடும்பங்களுக்காக நிவாரணப் பணிகளை பல நல்லுள்ளங்களின் உதவியுடன் பல சமூகசேவை அமைப்புக்கள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் ஆலையடிவேம்பில் ஏரம்பு அவர்களின் வேண்டு கோளிற்கு இணங்க கனேடிய தமிழ் பேரவையின் வடகிழக்கு நடுவத்தின் அம்பாரை மாவட்ட ஏற்பாட்டாளர் சமூக நேயன் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்களின் தலைமையில் ஆலையடிவேம்பு பனங்காடு பிரதேசத்தில் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று பனங்காடு நாககாளி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் கனேடிய தமிழ் பேரவையின் வடகிழக்கு நடுவத்தின் அம்பாரை மாவட்ட ஏற்பாட்டாளர் சமூக நேயன் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் , சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா, இளம் விஞ்ஞானி வினோஜ்குமார் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் நவநீதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது உரை நிகழ்த்திய சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தாலும் கொரோனா முடிவுற்றதாக அர்த்தமில்லை இது தொடர்பில் தெளிவான நிரந்தர முடிவு இன்னும் எட்டப்படவில்லை எனவே மக்களாகிய நீங்கள் சுய பாதுகாப்பு கருது உங்களை நீங்களேபாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்