சவளக்கடை விவசாய விரிவாக்கல் நிலையத்தினால் வீட்டுத் தோட்டம் மற்றும் வரம்புப்பயிர்ச் செய்கையாளர்களுக்கு விதைகள் வழங்கும் நிகழ்வு

ஜனாதிபதியின் எண்ணக்கருக்கமைவாக பத்து இலட்சம் வீட்டுத்தோட்டத்தினை உருவாக்கும் வேலைத்திட்டத்திற்கமைவாக  ‘சௌபாக்கியா வீட்டுத் தோட்டத்திற்கான விதைகள் வழங்கும் நிகழ்வு   நாவிதன்வெளி  பிரதேச செயலகப் பிரிவில் நேற்று  ஆரம்பித்து வைக்கப்பட்டது.
.
சவளக்கடை விவசாய விரிவாக்கல் நிலையத்தினால் முதல்கட்டமாக ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட வீட்டுத் தோட்டம் மற்றும் வேளாண்மை செய்கையில் ஈடுபடும் 610 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பயிர் விதைகள் அடங்கிய பொதிகள்  வழங்கி வைக்கப்பட்டன.
 
சவளக்கடை விவசாய விரிவாக்கல் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.சசிகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், உதவி பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா, விவசாய போதனாசிரியர் எம்.எஸ்.எம்.ஜெனித்கான், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் என மேலும் பலர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான பயிர் விதைகள் அடங்கிய பொதிகளை வழங்கி வைத்தனர்.
 
வீட்டுத்தோட்டச் செய்கையாளர்கள் 200 பேர் மற்றும் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான வரம்புப்பயிர்ச் செய்கையாளர்கள் 410 பேர் இதன் மூலம் நன்மையடையவுள்ளனர்,

Related posts