கல்முனையில் இதுவரை 20பேருக்கு தொற்று!கல்முனை சுகாதாரசேவைப் பணிப்பாளர் டாக்டர். குண.சுகுணன்

கல்முனைப்pபிராந்தியத்தில் இதுவரை 20பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப் பணிப்பாளர் டாக்டர். குண.சுகுணன் நேற்று(6)வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
 
இறுதியாக இறக்காமப் பகுதியில் இருவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து 18ஆகவிருந்த எண்ணிக்கை 20ஆக அதிகிரித்துள்ளது.
 
இறக்காமத்தைச் சோந்த ஒருவர்  கொழும்பின் புத்தக கடை ஒன்றில் பணிபுரிந்து தமது இல்லத்திற்கு திரும்பியிருந்தhர். அவரே இறுதியாக அடையாளப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளி.
 
அவரின் தந்தையாருக்கும் நோயாளியின் சகோதரருக்கும் கடந்த 4ஆம் திகதி பெறப்பட்ட பிசிஆர் மாதிரிகளின் முடிவுகள் நேற்று இரவு கிடைத்தது. அவை பொசிட்டிவாக கிடைக்கப் பெற்றது.
 
இதனையடுத்து இறக்காமம் பகுதியில் மேலும் இரு நோயாளிகள் அடையாளப்படுத்தப்பட்டு நேற்று(6)வெள்ளிக்கிழமை  காலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்கள்.
 
கல்முனைப் பிராந்தியத்தில் மினுவாங்கொடை பேலியகொடை திவுலப்பிட்டிய கொத்தணியில்  இதுவரை 20 பேர் கொவிட்19 உள்ளவர்களாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

Related posts