இறைசக்தியால் மட்டுமே கொரொனாவை ஒழிக்கமுடியும்!அம்.மாவட்ட மகாயாக நிகழ்வில் அம்பாறை மேலதிகஅரசஅதிபர் ஜெகதீசன்.

இறைசக்தியால் மட்டுமே கொரோனாவை ஒழிக்கமுடியும். அவனின்றி அணுவும் அசையாது. எனவே அனைவரும் இணைந்து இறைவனை பிரார்த்திப்பதன் மூலமாக கொடியகொரோனாவை நாட்டிலிருந்து ஒழிப்போம்.
 
இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற விசேட மஹாம்ருத்யுஞ்ஜய ஹோம நிகழ்வில் பிரதமஅதிதியாக கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்  தெரிவித்தார்.
நாட்டின் பிரதமரும் புத்தசாசன சமயவிவகார கலாசாரஅலுவல்கள்அமைச்சருமான மஹ்pந்தராஜபக்ச விடுத்தவேண்டுகோளுக்கமைவாக இலங்கைத்திருநாட்டின் மக்கள்  கொரோனாத்தாக்கத்திலிருந்து மீள்வதற்கும் நாட்டைவிட்டு கொரோனா ஒழியவும்  அருளாசிவேண்டி (5) வியாழக்கிழமை காலை  காரைதீவில்  விசேட மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமமும் பிரார்த்தனையும் பூஜையும் இடம்பெற்றது.
 
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  5.30மணிக்கு காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில்  மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமத்திற்கான கிரியைகள் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் தலைமையில் ஆரம்பமாகி 8மணியளவில் நிறைவுற்றது.
நிகழ்வில் ஆலய தர்மகர்த்தாக்கள் ஏனைய ஆலயங்களின் சிவாச்சாரியார்கள் தர்மகர்த்தாக்கள் பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சுகாதாரவிதிப்படி கலந்துகொண்டார்கள்.
 
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
 
இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளை மேற் கொள்ளுமாறு வேண்டுகோள்  பிரதமரால் விடுக்கப்பட்டிருந்தது.
 
அதற்காக  நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு திணைக்களப்பணிப்பாளர் அருளாநந்தம் உமாமகேஸ்வரனின் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி இத்தகைய பிரார்த்தனைகளை அனைத்து இனமக்களும் இணைந்து செய்யும்போது நிச்சயம் இறைவன் இக்கொடியகொரோனாவை நாட்டில் மட்டுமல்ல உலகத்திலிருந்தே ஒழிப்பார். இது இறை நம்பிக்கை. என்றார்.
 
ஹோமம் செய்த பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் அருளுரையாற்றுகையில்:
‘வேதங்களிலுள்ள இம்மந்திரம் கொடியநோய்களை தூரவிலக்குவதோடு மரணபயத்திலிருந்து விடுபடவும் உதவும். இந்த யாகத்தின்போது பலவகையான மூலிகைகள் மருந்துகள் ஆகுதிசெய்யப்படுகின்றன. இதில் வரும் புகையானது பலவித நோய்களை தீர்க்கவல்லது. இத்தகைய யாகத்தால் கிராமமக்கள் நோய்நொடியின்றி பயபீதியின்றி நிம்தியாக வாழவழிவகுக்கும். நாட்டின் சலஇனமக்களுக்கும் நன்மைபயக்கும். ஆறுதலையும் நிம்மதியையும் தரும்.’என்றார்.
 
இங்கு நடைபெற்ற  விசேட ஹோமம் பிரார்த்தனை வழிபாடுகள்  காலை 6.30 மணிமுதல் 7மணிவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தமிழ்ச் சேவை  ‘ஆலய தரிசனம்’ நிகழ்ச்சியில் நேரடிஒலிபரப்புச் செய்யப்பட்டது. காரைதீவிலிருந்து இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன பிராந்தியச் செய்தியாளர் வி.ரி.சகாதேவராஜா இந்நிகழ்ச்சியை நேரடியாக அஞ்சல் செய்தார்.
 
மாவட்ட இந்துசமய கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி அனைவருக்கும் நன்றிகூறினார்.
இதேபோன்ற மகா யாக நிகழ்வுகள் (6) கல்முனை தரவைப்பிள்ளையார் ஆலயத்திலும் எதிர்வரும் 9ஆம் திகதி திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்திலும் 15ஆம் திகதி உகந்தமலை முருகனாலயத்திலும் நடைபெறவிருக்கின்றது.

Related posts