நாளை(5) நடைபெறவிருக்கும் இலங்கையின் 9வது பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்காகப் பயன்படுத்தபடவிருக்கும் கல்முனைப்பிராந்திய சகல வாக்களிப்புநிலையங்களுக்கும் நேற்று(3) திங்கட்கிழமை புகைவிசிறப்பட்டது.
கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் குண.சுகுணனின் ஏற்பாட்டில் சகல சுகாதாரைவைத்திய பிரிவுகளிலுமுள்ள சகல வாக்களிப்புநிலையங்களிலும் நேற்றுக்காலை புகை விசிறப்பட்டது.
இன்று தொற்றுநீக்கல் பணிகள் சகல வாக்களிப்பு நிலையங்களிலும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கொரோனாத்தடுப்பு சுகாதார விதிமுறைகள் முறையாகப்பின்பற்றப்பட்டு வாக்காளர்கள் கொரோனா அச்சமின்றி சமுகஇடைவெளியைப்பேணி முகக்கவசத்துடன் சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதிசெய்வதே இதன்நோக்கமாகும் என பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.
இங்கு கல்முனை வாக்களிப்பு நிலையங்களில் சுகாதாரவைத்தியஅதிகாரி டாக்டர் பி.கணேஸ்வரன் தலைமையில் பொதுச்சுகாதாரபரிசோதகர் சா.வேல்முருகு சகிதம் புகைவிசிறப்படுவதைக்காணலாம்.