அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபைத் தேர்தலுக்காக 12கட்சிகளும் 2சுயேட்சை அணிகளும் களமிறங்கியுள்ளன.
11உறுப்பினர்களைப் பெறுவதற்காக 196 வேட்பாளர்கள் களத்தில் இறங்கி உள்ளனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ,தேசிய மக்கள் கட்சி ,ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ,ஐக்கிய மக்கள் சக்தி ,இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ,ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய 12 கட்சிகள் போட்டியிடுகின்றன.
செல்வநாயகம் ரசிகரன் தலைமையிலான சுயேட்சை குழு, அப்துல் மஜீத் யாஹிர் தலைமையிலான சுயேட்சைக் குழு ஆகிய இரண்டு சுயேட்சை அணிகளும் போட்டியில் நிற்கின்றன.
காரைதீவு வரலாற்றில் இதுவே ஆகக் கூடிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற தேர்தலாக உள்ளது.