கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நியமனத்திற்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன் தடையுத்தரவை நீடித்துள்ளார்கிழக்கு மாகாண ஆளுநரால் அம் மாகாண கல்விப் பணிப்பாளராக நிசாம் என்பவர் நியமிக்கப்பட்டார். இந் நியமிப்பு தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.குறித்த வழக்கு நேற்று முந்தினம் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது, இதன்போது வழக்கினை விசாரித்த நீதிபதி இளஞ்செழியன், ஆளுநரின் நியமிப்பிற்கு இடைக்காலத் தடையுத்தரவினை நீடித்தார்.இதனடிப்படையில், 20.5.2019 வரை இத் தடையுத்தரவு நீடிக்கும் என்றும், 20.5.2019 வரை மஞ்சூர் என்பர் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக தொடர்வார் என்றும் உத்தரவிட்டிருந்தார்இதேவேளை குறித்த வழக்கானது 20.5.2019 வரைக்கும் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Related posts
-
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் அமைப்பின்... -
அம்பாறை மாவட்டத்தில் 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி-மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிப்பு
அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்.... -
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில்...