றாணமடு இந்துக் கல்லூரியில் அனைவருக்கும் கல்வி எனும் இலக்குடன் இயங்கிவரும் விசேட தேவையுடைய மாணவர்களின் அலகானது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இணைந்த மாணவர்களில் ஒருவரான
யோகராஜா தரணிதரன் முறையாகக் கற்று தனது விசேட தேவையுடைய அலகில் இருந்து முதன்முறையாக க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவன் எனும் வரலாற்றுத் தடத்துடன் பரீட்சைக்குத் தோற்றி சிறப்பான பெறுபேற்றை பெற்றுள்ளார்.
றாணமடு இந்துக் கல்லூரி வரலாற்றில் தடம் பதிக்கும் அம்மாணவனையும், பொறுமை மற்றும் அர்ப்பணிப்போடு விசேட தேவையுடைய மாணவர்களின் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களையும், இம்மாணவனின் முன்னேற்றத்திற்காக அக்கறையோடு செயற்பட்டுக்கொண்டிருக்கும் அவரது பெற்றோர்களையும்.
பாடசாலைச் சமூகம் சார்பாக பாராட்டுகின்றோம்.