மாவட்ட டெங்கு ஒழிப்பு கலந்துரையாடல்.

மட்டக்களப்பு மாவட்ட டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல்   மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (05) இடம் பெற்றது.
 
மட்டக்களப்பு பிரதி பிராந்திய  சுகாதார சேவைகள்  பணிப்பாளர் வைத்தியர் நவலோஜிதன் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.
 
மாவட்டத்தில் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய சாத்தியமான சூழல் பல்வேறு இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதால் அவற்றை அழிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் பல முன்வைக்கப்பட்டன.
 
 
மாவட்டத்தில் அரச    திணைக்கள வளாகத்தில்  சில வற்றில் டெங்கு நுளம்புகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதனால் அவற்றை கட்டுப்படுத்துவதுதற்கு சம்பந்தப்பட்ட  திணைக்களங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளுராட்சி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என இங்கு  வலியுறுத்தப்பட்டது.
 
மாவட்டத்தில் டெங்கு பரவல்  தொடர்பாக கடந்த கால தரவுகளை   வைத்தியர் கிரிசுதன் அளிக்கை செய்தார்.
 
இதன் போது கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் அரச திணைக்களங்களில் டெங்கு பெருகும் சூழல் காணப்படுமாயின்  அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் போது சுட்டிக்காட்டினார்.
 
 
இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன், பிரதேச செயளாலர்கள், திணைக்கள தலைவர்கள், சுகாதார அதிகாரிகள், கல்வி அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், சுகாதார பரிசோகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related posts