சம்மாந்துறை வலயத்தில் இம்முறை கபொ.த. உயர்தரம் மற்றும் தரம்5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணப்பொதிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
கிழக்கு மாகாணகல்விப்பணிப்பாளத் எம்.கே.எம்.மன்சூரின் அறிவுறுத்தலுக்கமைய சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையிலான கல்வி அதிகாரிகள் குழுவினர் இப்பொதிகளை முகக்கவசமணிந்தபடி சமுகஇடைவெளியைப்பேணியவாறு தயார் செய்தனர்.
கொரோனா நெருக்கடி காரணமாக மாணவர்கள் வீட்டிலிருந்தவாறு கற்பதற்கு வசதியாக இந்த வருடம் க.பொ.த.(உஃத)இமற்றும் தரம்-5. பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் கற்றலை மேம்படுத்துமுகமாக சம்மாந்துறை வலய கல்வி அலுவலகத்தினால் விடுமுறை கால கற்றல் உபகரணப் பொதி செய்யப்பட்டது.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளையில் குறித்த வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் சமூக இடைவெளியைப் பேணி கற்றல் உபகரணப் பொதியை பாடசாலையில் பெற்றுக் கொள்ளலாமென வலயக் கல்விப் பணிப்பாளர் நஜீம் தெரிவித்தார்.
எனவே பெற்றோர்கள் இன்று 16ஆம் திகதி வியாழக்கிழமை அப்பொதிகளை தத்தமது பாடசாலைக்குச்சென்று பெற்றுக்கொள்ளலாம்.