மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாக, மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடலை நடத்தினர்.
இக்கலந்துரையாடல், மட்டக்களப்பு ஆளுநர் செயலகத்தில் (02) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காணிப் பிரச்சினைகள், பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, வைத்தியசாலைகளில் காணப்படும் ஆளனிப் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகள், கிழக்குப் பல்கலைக்கழகத்திலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டன.
இவை தொடர்பாகத் தான் தீர்வுத் திட்டமொன்றைச் செயற்படுத்தவுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதாகும், ஆளுநர் தெரிவித்தார்.
முடியுமான பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாகவும், தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கொரு தடவை மட்டக்களப்பு சிவில் சமூகத்தைச் சந்தித்துக் கலந்துரையாட உத்தேசிப்பதாகவும் ஆளுநர் உறுதியளித்தார்.
இச்சந்திப்பில் வைத்தியர்கள், சட்டத்தரணிகள், கல்வியலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்