அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கி பலருக்கு பல விடயங்களை தெளிவுபடுத்துவோம் என அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோரின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி முன்னேற்றமடையும் எனவும் அவர் கூறியுள்ளார்.
விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“அரசியல் நெருக்கடியில் ஐக்கிய தேசிய கட்சியினர் பணத்திற்கும், முறையற்ற அரசாங்கத்தின் பதவிக்கும் விலை போகவில்லை, எனவும் அனைவரும் ஒன்றினைந்தே நீதித்துறையின் ஊடாக ஜனநாயகத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி புதிய விடயங்களை வரவேற்கின்றது. 2020ம் ஆண்டுக்கு பிறகு அரசியல் ரீதியில் நிலையான மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும். நாட்டு தலைவராக இனி ஐக்கிய தேசிய கட்சியினரே தெரிவு செய்யப்படுவர்.
அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கி பலருக்கு பல விடயங்களை தெளிவுபடுததுவோம்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தில் ஐக்கிய தேசிய கட்சியே மாறுபட்ட ஒரு அரசாங்கத்தை முன்னெடுத்து செல்லும் என்றார்.