(சா.நடனசபேசன்)
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு விநாயகர் வித்தியாலயத்தின் ஆசிரியராகக் கடமையாற்றிய வே.குமாரகுலசிங்கம் அவர்கள் தனது 36 வருட கல்விச் சேவையிலிருந்து 20.05.2021 ஆம் திகதி ஓய்வு பெற்றார்.
கல்முனையினைப் பிறப்பிடமாகவும் பெரியநீலாவணையினை வதிவிடமாகவும் கொண்ட இவர் தனது முதல் நியமனத்தினை 1985 ஆம் ஆண்டு மொனராகலை வைக்கும்பர அ.த.க.பாடசாலையிலும் கடமையாற்றி அதன் பின்பு மகதோவ கீழ் பிரிவு தமிழ் வித்தியாலயத்திலும் இருந்ததுடன் கடமை நிறைவேற்று அதிபராக தெமோதர, உடுவரை மேற்பிரிவு தமிழ் வித்தியாலயத்திலும் கடமையாற்றியிருந்தார்
பின்பு அங்கிருந்து இடமாற்றம் பெற்று துறைநீலாவணை மெ.மி.த.க பாடசாலை மற்றும் விபுலானந்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் சுமார் 16 வருடங்கள் இவரது கல்விச்சேவை துறைநீலாவணை மண்ணிற்கு பெருமைசேர்த்தது மட்டுமல்லாது துறைநீலாவணை மண்ணில் இவர் ஆரம்பப் பிரிவில் கற்பித்த பலர் இன்று உயர் பதவிகளில் கடமையாற்றிக்கொண்டிருக்கின்றனர். இவரது இச் சேவையினை துறைநீலாவணைக் கிராம மக்களும், பொது அமைப்புக்களும், பழைய மாணவர்களும் இவருக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.
இறுதியாக பெரிய கல்லாறு விநாயகர் வித்தியாலயத்திலும் கடமையாற்றி இருந்தார்.
இவர் கடமையாற்றிய பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பல மாணவர்கள் சித்தி அடைந்தமைக்கு இவரது சிறந்த கற்பித்தல் காரணமாக அமைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவர் கல்முனை 2 ஐ சேர்ந்த வேலுப்பிள்ளை உருத்திராணி தம்பதிகளின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.