கல்வியமைச்சு நடாத்திய தேசிய கணித ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொண்ட சம்மாந்துறை வலய மாணவர் நால்வர்க்கு, வலய கல்வி அதிகாரிகள் முன்னிலையில் பாராட்டு நிகழ்வொன்று நேற்று நடைபெற்றது.
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.சஹதுல்நஜீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு குறித்த சாதனை மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.
கிழக்கு மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று தேசிய ரீதியில் பங்குபற்றிய சம்மாந்துறை முஸ்லிம் மத்திய தேசிய கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களான எம்.ஜ.பாத்திமா ஹில்மா, எ.என்.பாத்திமா ஹிமா ,எம்.எ.ஹம்துன் அகமட் மற்றும் வேப்பையடி கலைமகள் வித்தியாலய மாணவி ஏ.ஆயிஷா ஆகியோரே இவ்விதம் பாராட்டப்பட்டவர்களாவர்.
பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான ஏ.எல.ஏ.மஜீட் ,யு.எல்.றியால், ஏ.நசீர் ,கணித பாட உதவிக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.எம்.ஜௌபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
அதன்போது வலய கல்வி அதிகாரிகள் குழுவினர் குறித்த மாணவர்களை வாழ்த்தினர்.