மாவடிப்பள்ளி வீதி விவகாரம் : விவாதத்தின் பின்னர் பிரேரணை ஒத்திவைப்பு

காரைதீவு பிரதேச சபையில் நேற்று (15) விசேட அமர்வு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்றது.

 மாவடிப்பள்ளி கல்முனை நோக்கிய வயல் நிலங்களுக்குள்ளால் வரும் காபட் வீதியினை தடுத்து நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே விசேட அமர்வு ஒழுங்கமைக்கப்பட்டு விசேட பிரேரணை கொண்டுவரப்பட்டது. இந்த பிரேரணையை உறுப்பினர் மோகனதாஸ் வழிமொழிய உறுப்பினர் எம்.என்.எம். றனீஸ் எதிர்த்தார்.

பிரதித்தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் உட்பட ஐந்து முஸ்லிம் உறுப்பினர்கள் வீதி அமைக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்தனர். . இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கருத்துக்களை முன்வைத்தனர். வாத பிரதிவாதங்கள் அதிகரித்து நீண்ட நேரமாக நடைபெற்ற இந்த விசேட அமர்வில் பலத்த கருத்தாடல் நடைபெற்றது.

பிரதேச சபை உறுப்பினர் கே. குமாரசிறி இப்பிரரேனை தொடர்பில் ஆலோசனையுடன் கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த பிரேரணை தொடர்பில் சமூகமளித்த 11 உறுப்பினர்களுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் 05 பேர் வாக்கெடுப்புக்கு விடுமாறும் ஆறுபேர் ஒத்திவைக்குமாறும் கோரியதற்கு இணங்க காலவரையரையின்றி இப்பிரேரனை ஒத்திவைக்கப்பட்டது. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் உறுப்பினர் ஜெயதாசன்  சபைக்கு சமூகமளிக்கவில்ல.

Related posts