நல்லிணக்கப் பொறிமுறையை தொடர்பில் அரசினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் மற்றும் அதனை செயற்படுத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக மட்டக்காப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை 26ம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்றது
நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தினால் மட்டக்களப்பு தனியார் விடுதி ஒன்றில் ஒரு நாள் கொண்ட நிகழ்வாக நடைபெற்றது.
இந் நிகழ்வில், நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தி பணிப்பாளர் சந்தியா விஜய பண்டார, இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளர் சஞ்சை லேணகே, செய்திப் பிரிவின் பணிப்பாளர் விமுக்தி துஷர மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்,
இந்த நல்லிணக்க பொறிமுறையின் நிலை தொடர்பில் ஊடகவியலாளர்களின் பங்கு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்த நிலை மாறுகால நீதி நல்லிணக்கப் பொறிமுறை ஊடாக நாட்டின் சமாதானம், இன ஒற்றுமை, மீண்டும் ஓர் யுத்தம் ஏற்படாமை போன்ற பல விடயங்கள் பற்றி செயற்படுத்தப்ட்டு வருகின்றது.
இலங்கையில் தற்போது 9 மாகாணங்களிறும் இச் செயற்பாடு தற்போது தமது செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இதில் கலந்து கொண்ட நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலக உத்தியோகத்தர்களால் தெரிவிக்கப்பட்டது.